எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இதை தான் செய்வேன்… முட்டாளாக இருக்க விரும்பவில்லை – அஸ்வின் ஓபன் டாக்

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவி

By ·

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை. இதனால் வெளிநாட்டு வீரர்களோடு இந்திய அணியின் பல சம்பவங்களும் இந்திய தேர்வாளர்களிடையும், கேப்டன் ரோஹித் ஷர்மாவையும் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் இந்த போட்டியில் இந்தியா மிகவும் மோசமான தோல்வியை சந்திதது. ஆனால் பின்னர் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தன்னால் வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை காட்டினார். இந்நிலையில் 2018க்குப்பின் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கண்டாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதற்கான விடையை நான் எவ்வாறு கண்டறிவது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதையும் எப்படி இது சிறப்பாக அமைத்திருக்கலாம் என்பதையும் நான் யோசித்தால் அது என்னுடைய முட்டாள்தனமாகும். அப்படி யோசிப்பதற்கு பதிலாக எப்படி நான் 94 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்று விளையாடினேன்? என்று நினைத்து அதை செய்ததற்காக பெருமைப்பட வேண்டும். சமீப காலங்களாக நான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்கள் அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டவசமாகவோ பேட்டிங் செய்பவர்களாக இருக்கிறோம்

அதில் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று மிகச் சிறப்பாக இருப்பதாலேயே முன்னுரிமையுடன் வாய்ப்பு பெறுகிறார். அதனால் நான் எதற்காக நீக்கப்பட்டேன் என்று யார் மீதும் குறை சொல்லி கை காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் 2018 – 19 காலகட்டத்திற்கு பின் உடல் அளவிலும் மனதளங்களிலும் இது போன்ற தேவையற்ற விஷயங்களை பற்றி சிந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாறாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எப்படி வெற்றியில் பங்காற்ற முடியும் என்று யோசிக்க விரும்புகிறேன்.

ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஈகோவை கொண்டிருந்தால் நான் தான் நம்முடைய அணியின் மிகப்பெரிய வெள்ளை யானையாக இருப்பேன். ஆனால் அவ்வாறு நான் இருக்க விரும்பவில்லை. எனவே எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் வெற்றிக்காக விளையாடுவேன். இல்லையென்றால் இந்தியாவின் வெற்றிக்காக ஆதரவு கொடுப்பேன்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பின்னர் தோனியின் தலைமையில் சிறப்பாக விளையாடிய அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி 2017 வரை அனைத்து வகை அனைத்து கிரிக்கெட்டிலும் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக செயல்பட்டு வந்தார். ஆனால் 2017 பின்னர் இவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை