தோனியை சமாளிக்க சந்தீப் ஷர்மாவிற்கு அஸ்வின் கொடுத்த ஐடியா – வீடியோ உள்ளே.

ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பாதி ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இரண்டு முற

By ·

ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பாதி ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இரண்டு முறை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் அணி வீழ்த்தியது. அதுவும் ஒரு முறை கிடையாது இரண்டுமுறை சென்னை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்.

அதன் மூலம் புள்ளி பட்டியலிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த போட்டியில் முதல் இன்னிங்கில் சுமாராக விளையாடிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 155 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். இந்நிலையில் சந்தீப் சர்மா முதல் வீசிய முதல் பந்திலேயே அவர் அழுத்தத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது. ஏனென்றால் முதல் இரண்டு பந்துகள் ஒய்டுகளாக சென்றது.

அதோடு அதற்கு பிறகு வந்த 2 பந்துகளை தோனி 2 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அதற்கு பிறகு சுதாரித்து கொண்ட ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா கடைசி மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்துவீசினார். இதனால் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவால் ரன்கள் அடிக்க முடியாமல் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐடியா கொடுத்த அஸ்வின் :

இந்நிலையில் அஸ்வின் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை போட்டியின் போது தோனி இரண்டு சிக்ஸர்களை அடித்தது பற்றி ஒரு விடீயோவில் பேசியிருந்தார். அந்த வீடியோவில் கூறுகையில் “சந்திப்பு தோனிக்கு கடைசியில் பௌலிங் போட்டுக்கொண்டிருந்தார், அப்போது இரண்டு சிக்ஸர்களை விளாசினார் தோனி. 20 ரன்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் அதுவும் தோனி போன்ற ஒருவருக்கு பௌலிங் போடுகையில் அவர் 2 சிக்ஸர்கள் அடித்த பிறகு உங்களுக்கு அதிலிருந்து மீண்டு வர முடியாது.

இந்நிலையில் நான் அப்போது நான் அவரிடம் சென்று இருப்பதிலேயே அதிக விக்கெட்டை கொடுக்கும் பந்து எது என கேட்டேன். அதற்கு சந்திப்பு ஸ்லொவர் லெந்த் பால் என்று கூறினார், நானும் சரி அதனையே போடுங்கள் என்று கூறினேன். ஏனென்றால் அந்த நிலைமையில் பேட்ஸ்மென் அந்த மாதிரியான ஒரு பந்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால் அவனுக்கு தெரியும் பௌலர் அதிக அழுத்தத்தில் இருக்கிறார் என்று. எனவே அந்த பந்தை பேட்டர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கூறினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை