இவ்வளவு சிறிய காலத்தில் எத்தனை ஏற்ற தாழ்வு.. அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன் – பிரித்வி ஷா குறித்து அஸ்வின் புகழாரம்.

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இ

By ·

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.

U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஷா கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த வீரேந்திர சேவாக் இவர் தான் என்று பலர் கூறினார்.

ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 8 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவரினால் வேகமும், ஸ்விங்கும் தான். அதனை பயன்படுத்தி இவரை தொடக்கத்திலேயே அணிகள் ஆட்டமிழக்க செய்து விடுகின்றனர். இப்படி தொடந்து பல அடிகள் விழுவ அவருக்கு இந்திய கிரிக்கெட் தூரமாக சென்றது.

இப்படிபட்ட நிலையில் தான் பிரித்வி ஷா குறித்து பேசியுள்ளார் அஸ்வின். அவர் கூறுகையில் “பிருத்வி ஷா போன்ற ஒருவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரது குறுகிய கால வாழ்க்கையில், அவர் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் சந்தித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை வீட்டை விட்டு வெளியேறுவது, இங்கிலாந்தில் விளையாடுவது, புதிய வீரர்களைச் சந்திப்பது போன்றவை அவருக்கு புதிய மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல இருக்கும். நான் கவுண்டி விளையாடும் போது அதே போலத்தான் உணர்ந்தேன், அதனால் அவரும் அப்டியே உணர்வார் என்று நினைக்கிறேன்.

இதனை காலம் அவருக்கு நிறைய கற்றுக்கொண்டிருப்பார். அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அவரது பணி நெறிமுறைகளைக் கற்றுக் கொண்டிருப்பார். இங்கிலாந்திலும் ஒரு சில இளைஞர்களுக்கு தன்னுடைய அனுபவத்திற் பகிர்ந்து கொள்ளும் நிலையில் இருப்பார். அதுவும் அவரது கிரிக்கெட்டை மாற்றிவிடும். பிருத்வி ஷாவைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அஸ்வின்.

மேலும் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய போது கூட 4ஆம் தேதியின் போது முக்கியமான நேரத்தில் ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தார். அது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சோமர்செட் அணிக்கு எதிரான 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தம்டன்ஷைர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அவர் இரட்டை சதமடித்தும் 28 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 244 (153) ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை