டெஸ்ட் கிரிக்கெடின் உச்சத்தை அடைய முடியாமல் போய்விட்டதே – அஸ்வின் விரக்தி.

நேற்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரு

By ·

நேற்று தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.

இதனால் வெளிநாட்டு வீரர்களோடு இந்திய அணியின் பல சம்பவங்களும் இந்திய தேர்வாளர்களிடையும், கேப்டன் ரோஹித் ஷர்மாவையும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தான் அந்த தோல்வியில் இருந்து மீளவும் அடுத்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023- 25 சுழற்சியானது தொடங்கியுள்ளது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த முடிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.

அஸ்வின் இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கடந்தார். மேலும் அதிகமுறை பவுட் அவுட் செய்தது. அப்பா மற்றும் மகன் இருவரையுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டமிழக்க செய்தது என பல சாதனைகளையும் ஒரே போட்டியில் படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்க காரணத்தையும் காட்டி பிரமிக்க வைத்தார் அஸ்வின்.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் பேசிய அஸ்வின் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில் “கிரிக்கெட்டிலும் சரி வாழ்க்கையிலும் சரி ஒவ்வொரு மனிதனும் பல்வேறு ஏற்ற இரங்கங்களை சந்திக்கின்றனர். சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் போதுதான் நமக்கு வாய்ப்புகளும் வரும். அந்த சூழ்நிலையில் நாம் யாரை வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம் ஆனால் எதிலிருந்து என்ன நாம் தெரிந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றார் அஸ்வின்.

அஸ்வின் கொடுத்த பேட்டி :

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பற்றி பேசிய அஸ்வின் கூறுகையில் “டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனலில் வெல்வதே மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவேளை நாங்கள் அதை வென்றிருந்தால் அதுவே என்னுடைய கேரியரின் மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். அந்த போட்டியில் நானும் வெற்றியில் நல்ல பங்காற்றி இருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த போட்டியின் முதல் நாளிலேயே வெற்றி எங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது.

என்னை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இருந்து நீக்குவதிலும் இந்திய அணிக்காக விளையாடும் மற்றொருவை நீக்குவதிலும் என்ன வித்தியாசம் இருக்க போகிறது. அதே போல அணியில் இடம்பெற வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் மனரீதியாக தயாராக இருந்தேன்.அதனால் பிளெயிங் லெவலில் இடம்பெறாதது எனக்கு பொருத்தம் கிடையாது. கிரிக்கெட்டுக்கும் அனைத்தையும் புரிந்து கொண்டு களத்தில் என்னுடைய சிறந்த முயற்சிகளையும் ஆதரவையும் கொடுக்க விரும்புகிறேன் என்றார் அஸ்வின்.

எத்தனை சாதனைகள் படைத்தாலும் நாட்டுக்காக உலகக் கோப்பை வெல்வதே ஒரு வீரரின் உச்சகட்ட சாதனையாக இருக்கும் எனலாம். அந்த வகையில் ஏற்கனவே 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன் டிராபியை வென்ற அஸ்வின் 36 வயதை கடந்து விட்டதால் 2025இல் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவது சந்தேகம் என்றே சொல்லலாம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை