ஐபிஎல் போட்டியில் இருந்து வெளிய வாங்க.. தோனியும் மற்ற கேப்டன்களும் இப்படித்தான் செய்தனர் – அஸ்வின் அதிரடி.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை போட்டியானது தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே இந்தியா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது. மேலும் இந்த போட்டியில் விளையாடும் வீரர்களே அதிகபட்சம் உலக கோப்பை போட்டியில் பங்குபெறுவர்கள் என்று கூறப்பட்ட நிலையில் தான் ஆசிய கோப்ப
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை போட்டியானது தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாகவே இந்தியா ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது. மேலும் இந்த போட்டியில் விளையாடும் வீரர்களே அதிகபட்சம் உலக கோப்பை போட்டியில் பங்குபெறுவர்கள் என்று கூறப்பட்ட நிலையில் தான் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
அப்படி இந்த அணியில் அஸ்வின், சாஹல், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளத நிலையில் அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சஞ்சு சாம்சன் இந்திய அணியோடு பயணம் செய்யும் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு சமீப காலத்தில் ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடுவரும் சூரியகுமார் யாதவ் அணியில் பெற்றுள்ளார். இதனால் ரசிகர்கள் பலவிதமான விமர்சனங்களை இந்த அணியின் மீது வைத்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறுகையில் ” இந்த அயர்லாந்து தொடரில் இதுவரை திலக் அதிக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் முதல் பந்தில் இருந்தே அசத்திய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் இந்த இளைஞர்கள் தெளிவான மனதுடன் பேட்டிங் செய்ய வருகிறார்கள். அவர் அணியில் புத்துணர்ச்சியைக் கொண்டு வருவதால் சூரியகுமார் யாதவ் இடத்திற்கு அவர்கள் ஆதரித்தனர்.
சூரியகுமார் யாதவிடம் அந்த எக்ஸ்-காரணி உள்ளது, அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக வர வேண்டும் என்று அணி அவரை ஆதரிக்கிறது. நாங்கள் உலகக் கோப்பைகளை எப்படி வென்றோம் என்பதைப் நாம் திரும்பி பார்க்க வேண்டும். அது எம்எஸ் தோனியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த கேப்டனாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் வீரர்கள் நன்றாக வருவதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
வீரரை நீக்குவது அல்லது தேர்வு செய்வது தொடர்பாக நீங்கள் ஆதரவாகவும் எதிராகவும் விவாதம் நடத்த விரும்பினால், ஆரோக்கியமான விவாதத்தை நடத்தலாம். சூர்யகுமார் யாதவ் எவ்வளவு சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது தாக்கம் போட்டியில் அவர் ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். மேலும் இந்திய அணியின் டி20 வீரராக இருந்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள விவாதங்கள் எல்லாம் ஐபிஎல் போட்டியினால் வந்த விவாதங்கள் தான்.
நீங்கள் உலகக் கோப்பைக்கு வரும்போது, எங்கள் வீரர்கள் அனைவரையும் இந்தியாவின் பிரதிநிதிகளாகப் பார்க்க வேண்டும். ஐபிஎல் முடிந்ததும், ஒரு துணியைப் போட்டு அதிலிருந்து முன்னேறுங்கள். மேலும் ஒரு வீரர் இந்தியாவுக்காக விளையாடினால் அவர் திறமையாக விளையாடினர் என்று சொல்லுங்ககள். அவர் ஐபிஎல் முடிந்த பிறகும் ரசிகர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு முக்கியமான சேஸிங்கில் விராட் கோலியுடன் இணைந்து SKY பேட்டிங் செய்கிறார் என்று வைத்துகொண்டால் நீங்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சூர்யகுமாரைப் பாராட்டுவீர்கள். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று தரவேண்டும் விரும்புவீர்கள். அதையே இப்போதும் செய்யுங்கள் என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.