48 ஆண்டுகால உலகக்கோப்பையில் புதிய சாதனையை படைத்த ரச்சின். மேலும் சச்சினின் சாதனையை முறியடித்து உள்ளார்.
இன்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து
இன்றைய பாகிஸ்தான் எனக்கு எதிரான போட்டி நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்தர சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் அவர்கள் நினைத்து முடிவு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 401 ரன்களை குவித்து இருந்தது. நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும் கான்வே 39 பந்துகளை விளையாடி நிலையில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலியிடம் ஆட்டம் இழுந்து வெளியேறினார்.
அதன் பின் களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திர பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். ஒரு பக்கம் ரச்சின் ரவீந்திர அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அதே நிலையில் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சண் தனது அதிரடி போட்டியை காட்டினார். வில்லியம்சன் இப்போது தான் காயத்திலிருந்து மீண்டும் இந்த போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் தனது மூன்றாவது சதத்தை முழுமை செய்தார்.
இந்த உலகக்கோப்பையில் இதுவரை அவர் மூன்று சதம் அவர் அடித்துள்ளார் இருப்பேனும் அவர் 108 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் வந்து வெளியேறினார். 15 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 48 ஆண்டு கால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதத்தை அடித்த வீரர் என்று பெருமையும் ரச்சின் ரவீந்திர பெற்றிருக்கின்றார்.
அதேபோல் 24 வயதுக்குள் உலக கோப்பை தொடரில் அதிகம் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையும் ரச்சின் முறியடித்துள்ளார். மேலும் 25 வயதிற்குள்ளான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த சச்சின் சாதனை சமன் செய்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 1996 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 523 ரன்களை குறித்து இருந்தார் இன்றைய போட்டியின் மூலம் அதை சமம் செய்து உள்ளார். தற்போது பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 160ரன்களை குவித்துள்ளது. தற்போது போட்டியானது மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.