அவர் செய்வதை பாதி நான் செய்தாலே பெரும் மகிழ்ச்சி… ரச்சின் ரவீந்திர நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாது தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2024 தொடரில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக அணியின் அனைத்து வீரர்களும் தங்களுடைய வேலையே சரியாக செய்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியை சேர்ந்த வீரர்களும் சென்னை அணியில் சிறப்பாக செயல்படுகின்றனர். மேலும

By ·

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாது தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2024 தொடரில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக அணியின் அனைத்து வீரர்களும் தங்களுடைய வேலையே சரியாக செய்து வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியை சேர்ந்த வீரர்களும் சென்னை அணியில் சிறப்பாக செயல்படுகின்றனர். மேலும் நியூசிலாந்து அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே உள்ள தொடர்பு பல காலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தற்போது சென்னை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ஸடீபன் பிளமிங் நிசிலாந்து கிரிக்கெட் வீரர் என்பதும். அவரது தலைமையில் இதனை காலம் சென்னை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை போன்றே அதிரடி வீரரான மெக்கல்லம், சான்டனர் ஜேக்கப் ஓரம் என பல நியூசிலாந்து வீரர்களை சென்னை அணி எடுத்து அவர்களை சரியாகவும் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவின் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அணி வெற்றியடைய உறுதுணையாக இருந்தார். அந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் டேவின் கான்வே காயம் காரணமாக விளகியிருந்தார்.

இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்த நிலையில் தான் அவருக்கு பதிலாக ஐபிஎல் மினி ஏலத்தில் எடுத்த ரச்சின் ரவீந்திராவை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது சென்னை அணி. இதனை பயன்படுத்திக்கொண்ட ரச்சின் ரவீந்திரா முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டதால். இவர் தான் சென்னை அணியின் எதிர்காலம் என்றும் பார் குறி வருகின்றனர்.

மேலும் சென்னை அணி ஆடிய இரண்டாவது போட்டியிலும் யாத்திரையாக விளையாடு 20 பந்துகளில் 46 ரன்களை விளாசியிருந்தார் ரவீந்திரா. இப்படிப்பட்ட நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரசிகர்கள் குறித்தும் டேவின் கான்வே குறித்தும் பேசியுள்ளார் ரவீந்திரா. அவர் கூறியது பின்வருமாறு..

நான் கலத்தில் அதிரடியாக விளையாட விரும்பினேன். ருதுராஜ் அவர்களுடன் நான் பேட்டிங் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. ருதுராஜ் அணி வீரர்களை மிகவும் நிதானமாக வழி நடத்துகிறார். எப்போதுமே ஒரு கிரிக்கெட் வீரராக கிடைக்கும் பவர் பிளேவை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டேவின் கான்வே செய்த விஷயங்களில் பாதியை நான் செய்தலே போதும் மிகவும் மகிழ்ச்சியாக் இருப்பேன் என்றார் ரச்சின் ரவீந்திர

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை