மத்தவங்க என்ன வேணாலும் சொல்லட்டும், ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிட்ட இதுல கவனமாக இருக்கணும் – ரஹானே பேட்டி.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் தொடங்க இருகிறது. மேலும் இந்த போட்டியானது இந்தியாவில் நடைபெறுவதினால் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. உலக கோப்பை சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு வ

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் தொடங்க இருகிறது. மேலும் இந்த போட்டியானது இந்தியாவில் நடைபெறுவதினால் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. உலக கோப்பை சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு வீரர்கள் மீதும் தேர்வாளர்கள் மீதும் கடுமயான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடைய உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா பல தொடரிகளில் விளையாட இருக்கிறது.

குறிப்பாக நாளை தொடங்க்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பல வகை கிரிக்கெட் போட்டிகள் தொடரானது நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சில முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுத்ததும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டியில் பேசிய IND vs WI போட்டியில் இந்தியாவின் துணை கேப்டனான ரஹானே பேசியுள்ளார்.

ரஹானே கூறியது :

அவர் பேசுகையில் “இந்த தொடரை பொறுத்தவரில் சிராஜ் ஒரு மூத்த பந்துவீச்சாளராக இருக்கிறார், ஜெய்தேவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஷர்துல் தாக்கூர் மற்றும் நவ்தீப் சைனி மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே இது அவர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. முகமது ஷமி எங்களின் மூத்த பந்துவீச்சாளர், அவர் எங்களுக்காக உண்மையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அவர் பல போட்டிகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார். எனவே அவருக்கு ஓய்வு என்பது கட்டாயம்.

அதே சமயம் வெஸ்ட் இண்டீசை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. வெளியில் மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் நாங்கள் அவற்றை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். கடந்த ஓரிரு வருடங்களாக சொந்த மண்ணில் அவர்களது ஆட்டம் டெஸ்டில் சிறப்பாக உள்ளது. நாங்களும் பார்படாஸில் வருவதற்கு முன்பு நாங்கள் நன்றாகத் தயாராகிவிட்டோம். எனவே இது நன்றாக தொடங்க வேண்டிய நேரம் என்றார் ரஹானே.

மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசிய அவர் கூறுகையில் “ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான திறமைசாலி. உள்ளூர் போட்டியில் மும்பைக்காகவும் ஐபிஎல்லில் சிறப்பாகச் செயல்பட்டார். சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் மிக முக்கியமானது. என்னுடைய அறிவுரை அவருக்கு என்னவென்றால். அவர் அங்கு சென்று சுதந்திரமாக பேட்டிங் செய்யும் விதத்தை வெளிப்படுத்த வேண்டும், மேலும் சர்வதேச கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார் ரஹானே.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை