தோனியின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது – ஆப்கானிஸ்தான் வீரர் ஓபன் டாக்.
உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரானது மிகவும் பிரபலமானது. சொல்லப்போனால் பல வெளிநாட்டு வீரர்கள் இந்த பொடியை விளையாடுவதற்காக தங்களுடைய நாட்டுக்காக விளையாடுவதையே தவிர்த்து கலந்து கொள்கின்றனர். ஆனாலும் பல இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி மிகப்பெரிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. பல வீரர்கள்
உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடரானது மிகவும் பிரபலமானது. சொல்லப்போனால் பல வெளிநாட்டு வீரர்கள் இந்த பொடியை விளையாடுவதற்காக தங்களுடைய நாட்டுக்காக விளையாடுவதையே தவிர்த்து கலந்து கொள்கின்றனர். ஆனாலும் பல இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி மிகப்பெரிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. பல வீரர்கள் இடஙக போட்டியில் உருவாகி இறுகின்றனர். இந்நிலையில் 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமானர்
இதுவரை 43 டி20 போட்டிகள் மற்றும் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக மாறிய அவர் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். மேலும் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரிலும் அசத்தியிருந்தார். இந்நிலையில் தான் தோனியுடன் பேசியது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ரஹ்மனுல்லா குர்பாஸ்.
அவர் பேசுகையில் “நான் 2022-ஆம் ஆண்டு முதல்முறை எம்,எஸ் தோனியை சந்திக்கும்போது குஜராத் அணியில் தான் இருந்தேன். அப்போது நான் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மிகவும் அதிகமான அழுத்தத்தில் நான் இருந்தேன். இதனால் தோனியிடம் என்ன பேசுவது என்று எனக்கு தோன்றவில்லை. என்னால் அவரிடம் பேசவும் முடியவில்லை அந்த அவருக்கு அழுத்தில் இருந்தேன்.
அப்போதுதான் அவர் என்னுடையஅழுத்தமான மனநிலையை புரிந்து கொண்டு என் தோள்மீது கை போட்டு எனக்கு ஆறுதலாக பல விஷயங்களை எடுத்துரைத்தார். அதேபோன்று அவர் எனக்கு அறிவுரை கொடுத்த விதம் எனக்கு அதீத நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் இம்முறை இந்த ஆண்டு தோனியை சந்தித்தபோது மிகவும் நம்பிக்கையுடன் அவரிடம் பேசினேன். என்னுடைய கிரிக்கெட், தனிப்பட்ட வாழ்க்கை முறை என பல்வேறு விஷயங்களை பற்றி பேசினேன்.
மேலும் என்னுடைய கிரிக்கெட் மற்றும் செயல்திறனை எப்படி உயர்த்துவது? அதற்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி முன்னேறுவது என பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கும் அவர் என்னிடம் மிகப் பொறுமையாக பதில்களை கூறினார். அவர் சொன்ன ஆலோசனைகளை எல்லாம் நான் ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன். தோனியின் பேச்சு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது அவரே என்னுடைய ரோல் மாடல் என்று கூறியுள்ளார் ரஹ்மனுல்லா குர்பாஸ்.