பரிசோதனை செய்து அணியை கெடுத்து விட்டேனா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டிராவிட்.

அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் 5 முதல் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி

By ·

அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் 5 முதல் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற இருக்கிறது.

இந்த தொடர் 50 ஓவர்களாக நடப்பதினால் எதிர்வரும் உலக கோப்பை போட்டிக்கு சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் 17 பேர் கொண்ட இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் கூறப்பட்டது. குறிப்பாக அந்த வீரர்களின் வருகையால் இந்திய அணியில் நிலவிய நம்பர் 4வது பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்துக்கான பிரச்சனை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாத அவர்கள் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ராகுல் மீண்டும் லேசான காயத்தை சந்தித்துள்ளதால் இந்த ஆசிய கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் ராகுல் டிராவிட் குறியாதவது “உங்களுடன் மிகவும் நேர்மையாக இருக்க, இந்த வார்த்தை பரிசோதனை சில நேரங்களில் சிந்திக்கப்படாமலேயே நிறைய வீசப்படுகிறது. நாம் சில நேரங்களில் பரிசோதனைக்காக பரிசோதனை செய்ய முயற்சிக்கிறோம் என்பதல்ல. சில நேரங்களில் நீங்கள் சில விஷயங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும். உங்களுக்கு ஒரு உதாரணம் கொடுக்க, எண். 4 மற்றும் 5 இடங்கள் நிறைய விவாதிக்கப்பட்டு பேசப்படுகின்றன.

ஆனால் சில சமயங்களில் நீங்கள் எதையாவது செய்யும் போது அதன் பின்னணியில் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கும். இருப்பினும் 18 மாதத்திற்கு முன்பே ராகுல், பண்ட், ஸ்ரேயாஸ் ஆகியோர் அந்த இடத்திற்கு விளையாடுவதற்கு தேர்வு செய்தோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 3 பேருமே 2 மாத இடைவெளியில் காயத்தை சந்தித்து வெளியேறினார்கள்

எனவே, நீங்கள் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். அதனால் நீங்கள் அந்த இடத்தில் புதியவர்களை சோதித்து பார்க்க நிலைமைக்கு வந்தீர்கள்” என்று கூறினார். அத்துடன் முதல் 2 போட்டிகளை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பையில் முழுமையாக விளையாடும் அளவுக்கு ராகுல் குணமடைந்து விடுவார் என்றும் ராகுல் டிராவிட் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை