2023 உலக கோப்பை குறித்து பயிற்சியாளரே கவலை – என்ன சொன்னார் தெரியுமா?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

இருந்த போதிலும் உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடந்தாலும் ஐபிஎல் போட்டியின் காரணமாக இங்குள்ள மைத்தனங்களின் தன்மை குறித்தும் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எப்படி இந்தியாவில் பந்துவீசுவார்கள் என்பது குறித்தும் நன்கும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இதனால் இந்த வருட உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அவர் கூறுகையில் “இத்தொடரில் நிறைய நல்ல அணிகளும் இருக்கின்றன. மேலும் இந்திய துணை கண்டத்தின் கால சூழ்நிலைகள் சாதகம் என்பது கடந்த 10 – 15 வருடங்களில் மிகவும் குறைந்து போயுள்ளது. ஏனெனில் ஐபிஎல் போன்ற தொடர்களில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர்”

அதில் 2 மாதங்கள் இந்தியாவுக்கு வந்து விளையாடும் அவர்கள் இங்குள்ள கால சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து செல்கின்றனர். எனவே நிச்சயமாக இது இந்தியாவுக்கு மிகவும் கடினமான தொடராக அமையும். இருப்பினும் அதில் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறேன். மேலும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுவது குறிப்பிட்டளவு அழுத்தத்தை கொடுக்கும். ஆனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் உலக கோப்பையில் அசத்துவதையையே நாங்களும் எதிர்பார்க்கிறோம்”

“எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடி வெற்றி காண்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக அமையும். தற்போது காயமடைந்துள்ள வீரர்கள் குணமடைந்துள்ளதால் நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த இத்தொடர் இறுதியாக அறையின் கதவுகளுக்கு அருகே சாதிப்பதற்காக வந்துள்ளது என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை