முதல் இரண்டு போட்டியில் இவர் விளையாட மாட்டாரா? ராகுல் டிராவிட் கொடுத்த அதிர்ச்சி அப்டேட்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியானது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இருக்கிறது, மேலும் இந்த தொடரில் 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படுவதினால் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஆசிய அண

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியானது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இருக்கிறது, மேலும் இந்த தொடரில் 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படுவதினால் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த முறை 50 போட்டி நடைபெறும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள ஆகிய அணிகள் ஒரு குழுவிலும் மீதம் இருக்கும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் மற்றொரு குழுவிலும் இருக்கின்றனர். அதவது ஒவ்வொரு குழுவில் இருக்கும் அணிகள் அந்த குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும். அதன் பிற்காடு முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

பின்னர் இரண்டவது சுற்றில் தேர்வான நான்கு அணிகளும் ஒவ்வொரு முறை விளையாடும், இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இருந்து சுற்றுக்கு முன்னேறும் என்பதினால் அணிகள் தொடர்ந்து வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்து இடம் பிடித்திருந்த கே.எல் ராகுல் கடந்த ஒரு வாரமாக ஆலூரில் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி கே.எல் ராகுல் நன்றாக இருந்தாலும் ஆசிய கோப்பை தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான் பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து டிராவிட் கூறுகையில் : கே.எல் ராகுல் கடந்த ஒரு வாரமாக எங்கள் அணியுடன் இணைந்து நன்றாகவே பயிற்சி செய்து வந்தார். ஆனாலும் அவரால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் விளையாட முடியாது என்று டிராவிட் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கே.எல் ராகுல் குறித்து பேசுகையில் கூறியதாவது : கே.எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். ஆனாலும் அவருக்கு சிறிய தசை பிடிப்புகள் இருக்கின்றன.

ஆனாலும் அவருக்கு சிறிய தசை பிடிப்புகள் இருக்கின்றன. எனவே பிசியோ என்ன சொல்கிறாரோ அதை பொறுத்துதான் கே.எல் ராகுல் அணியில் விளையாடுவார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேஎல் ராகுல் இன்னும் சில தினங்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் நிச்சயம் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 2 போட்டிகளுக்கு பிறகு இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை