WTC இறுதி போட்டியில் எங்களுடைய தோல்விக்கு காரணம் இதுதான் – மனம் திறந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ட்ராவிட்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வ

By ·

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் டாஸை வென்ற இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவு என்று அப்போதே ரசிகர்களும், முன்னாள் முன்னாள் வீரர்களும் விமர்சித்தார்கள். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆடிய இந்தியா 296 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு 446 ரன்கள் என்ற இமாலய இலக்கை வைத்தது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்கில் பெரும் எ

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும், பயிற்சியாளர் ட்ராவிட்டின் தவறான வழிகாட்டுதலும் தான் காரணம் என்று பலவிதமான கருத்துகள் ஷோசியல் மீடியாவில் பரவியது. அப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த இந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தோல்வி குறித்து பேசியிருக்கிறியார்.

அவர் கூறுகையில் “டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் முதலில் பந்துவீச முடிவு செய்தோம், ஏனென்றால் சூழ்நிலையில் மேகமூட்டமாக இருந்தது மற்றும் ஆடுகளத்தில் நிறைய புல் இருந்தது, எனவே, பிட்ச்சில் கொஞ்ச நேரம் கழித்தது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், அதுதான் இங்கேயும். மேலும் சமீப காலங்களில் பெரும்பாலான அணிகள் இங்கிலாந்தில் முதலில் பந்துவீசும் முடிவையே தேர்வு செய்தனர்.

முதல் நாள் தொடக்கத்தில் 70/3 என்ற நிலையில் இருந்தபோது இது ஒரு சிறந்த முடிவு என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அடுத்த சில மணிநேரரங்களில் நாங்கள் நிறைய ரன்களை விட்டுக்கொண்டே இருந்தோம். ஆஸ்திரேலியாபை 300 ரன்களுக்குள் வெளியேற்றியிருந்தாலும், நாங்கள் இந்த விளையாட்டில் இருந்திருப்போம். நான்காவது இன்னிங்ஸில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றார் ட்ராவிட்.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டாஸ் வென்ற இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது என்று கூறினார். அதோடு நான்காவது இன்னிங்ஸில் 300-க்கும் மேற்பட்ட இலக்கை துரத்துவோம் என்ற நம்பிக்கையுடன் அணி இருந்ததாகவும் டிராவிட் கூறினார்.

நாங்கள் போட்டியில் பின்னால் இருந்தாலும், எங்களினால் இன்னும் விளையாட்டிற்குள் வர முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. ஆனால் எங்களுக்கு அதற்க்கான பேட்டிங்கை கண்டிப்பாக நாங்கள் காட்டியிருக்க வேண்டும். நாங்கள் விளையாடிய மைதானம் 469 ரன் அடிக்க கூடிய விக்கெட் கிடையாது. பந்துவீச்சு ஏமாற்றமளித்து அதிக ரன்களை கொடுத்தோம். மேலும் சில மோசமான ஷாட்களை விளையாடினோம்” என்று ராகுல் டிராவிட் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை