இனிமேல் தான் இவர்களுக்கு சவாலே இருக்கு – இளம் வீரர்களை எச்சரித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
மேற்கிந்திய தீவுகளுக்கு தற்போது இந்திய அணியானது பல வகை கிரிக்கெட் தொடர் கொண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பாட்ட இந்திய அணியானது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் இப்போட்டியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
மேற்கிந்திய தீவுகளுக்கு தற்போது இந்திய அணியானது பல வகை கிரிக்கெட் தொடர் கொண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பாட்ட இந்திய அணியானது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் இப்போட்டியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷான், சுப்மன் கில் போன்றோர் மிகவும் திறமையாக செயல்பட்டார்கள்.
மேலும் உலக சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு பிறகு புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்களை குவித்தார். இதனால் புஜாராவின் டெஸ்ட் எதிர்காலமானது தற்போது கேள்விகுறியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
டிராவிட் கொடுத்த பேட்டி :
அவர் கூறியதாவது “எனக்கு தெரியும் ஜெய்ஸ்வாலும் சுப்மன் கில்லும் இன்னும் கிரிக்கெட் விளையாட விளையாட கொஞ்சம் கடினமாக சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள். அவர்களை பற்றி எதிர் அணிகளும் மேலும் மேலும் தெரிந்து கொண்டு அவர்களை ஆட்டமிழக்க முயற்சி செய்வார்கள். சொல்லப்போனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கூட அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எஜெய்ஸ்வாலை அவுட் செய்த ஏதவது தந்திரங்களை முயற்சி செய்வார்கள்.
இந்த போட்டியானது ஜெய்ஸ்வாலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனக்கு செய்யும் தந்திரங்களை சரியாக புரிந்து கொண்டு விளையாட வேண்டும். ஏனென்றால் ஒரு இளம் வீரராக நீங்கள் இந்த விஷியங்களை தெரிந்து கொண்டு, சிறப்பாக விளையாட தொடங்கினால், அணியும் உங்களுக்கு தகுந்த வாறு செயல்படும். எனவே அதனை நீங்கள் சரியாக செய்ய வேண்டும்.
அடுத்த போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார், எப்படி விளையாடுகிறார், அந்த சூழ்நிலைக்கு எப்படி ஒப்பித்து போகிறார் என்பதை காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். தேவைப்படும்போது அவர் தாக்குதல் ஆட்டத்தை ஆடி ரன்கள் குவிப்பதும் தேவைப்படும் போது தற்காப்புத் திறனுடன் இருப்பது மிகவும் சிறப்பானது. ஒரு பயிற்சியாளராக அதை விட வேறு எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சி எதுவும் அளிக்காது என்றார் டிராவிட்
இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவதைக் காண ஒரு பயிற்சியாளராக நன்றாக இருக்கிறது. இது கடைசி ஆட்டத்தில் யஷாஸ்வி அல்லது கடந்த ஆறு எட்டு மாதங்களில் ஷப்மேன் வளர்ந்த விதம் அல்லது இஷான் வழியைப் பார்த்தால் அது மிகவும் கடினமானது. எங்கள் உள்நாட்டு அமைப்பு, என்.சி.ஏ மற்றும் எங்களுக்கு சாத்தியமான பல் வீரர்களை உருவாக்கி இருக்கிறது. வர்கள் இன்னமும் இதே போன்று பல வீரர்களை உருவாக்க வேண்டும் என்றார் பயிற்சியார் ராகுல் டிராவிட்.