இந்த தோல்வி எங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது – தோல்விக்கு பின்னர் ராகுல் டிராவிட் பேட்டி.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாறி பின்னர் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடியாக விளையாட எளிதான வெற்றி பெற்றது. இதனால் வித்தியாசமான பரிசோதனைகளை செய்யும் ராகுல் டிராவிட் மீது நெட்டிசன்கள் பாலரும் குற்றசாட்டுகளை வைத்தனர்.
குறிப்பாக ஒரு பயிற்சியாளராக நெஹரா போல பாண்டியாவுக்கு உதவாமல் இருப்பதாகவும் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்த அவமானமான தோல்விக்கு பிறகு பேசிய இந்தியா அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்தியா செய்த தவறுகள் குறித்தும் அடுத்ததாக என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்தும் பேசினார்.
அவர் கூறுகையில் “இன்றைய தொடரை எங்களால் முடிக்க முடியவில்லை. வழியில் ஒரு சில தவறுகளை செய்தோம். 5 ஆட்டங்களையும் பார்த்தால் தவறுகள் நடந்துள்ளன. முதல் இரண்டு ஆட்டங்களிலும் கடைசி ஆட்டத்திலும் கூட நாங்கள் பேட்டிங் செய்யவில்லை. நம்மால் முடியும் ஆனால் அது நடக்கலாம், இது ஒரு இளம் வீரர்களை கொண்ட அணி. இது ஒரு வளரும் அணி என்பதால் சில இடங்களில் ஏற்ற இராக்கங்கள் இருக்கும்.
ஆனால் நிச்சயமாக இந்த தொடரில் தோல்வியை தழுவியது எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. நிச்சயமாக இந்த விளையாட்டில் ஆர்ப்பத்தில் ஏற்பட்டதில் இருட்னது வெளியே வந்து சரியான முடிவைப் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த தொடர் உண்மையில் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஒரு நல்ல T20I அணி. அவர்கள் தங்கள் சொந்த சூழ்நிலையில் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினர். அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் என்றார் ட்ராவிட்.
Rahul Dravid said, "it's a young team, it's a developing team. There are times we have to go through ups and downs". pic.twitter.com/NMortcJZx7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 14, 2023
மேலும் பேசிய அவர் கூறுகையில் “டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் மகிழ்ச்சியாக இருந்தாலும் 2வது டெஸ்ட் போட்டியில் வானிலை காரணமாக சிறிது ஏமாற்றமடைந்தோம். ஒரு நாள் போட்டிகளும் சிறப்பாக இருந்தன. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில் அந்த போட்டியின் இலக்குகள் சற்று வித்தியாசமாக இருந்தன. ஒரு நாள் தொடரில் இருந்து சில நல்ல பாடங்களை கற்றுக்கொண்டோம் என்றார் டிராவிட்