ஒரு பந்து என்னை தாக்கியது.. மயங்க் வீசும் போது கொஞ்சம் தள்ளி தான் நிக்கணும் – ராகுல் பேச்சு.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 15-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதனத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 15-ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதனத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்க்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது ஆர்சிபி. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது ஆரம்பத்தில் அவர்களுக்கு கை கொடுத்த நிலையிலும் அதன் பின் லக்னோ அணியின் மிடில் ஆர்டரில் வந்த நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நான்கு பக்கமும் சிதறடித்து இருந்தனர். அதேபோல் மிடில் ஆர்டரில் வந்த பூரானும் 21 பந்தில் 46 ரன்களை அவர் அடித்து இருந்ததார்.
இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்து இருந்தனர். அதன் பின் 182 ரன்கள் இலைக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூர் அணி அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனும் விராட் கோலியும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறவிட்டனர். மேலும் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ஜொலிக்காத நிலையில் போட்டியில் 150+ KMPH வேகத்தில் வீசிபெங்களூரு அணியை நிலைகுலைய வைத்தார் மயங்க் யாதவ்.
இந்நிலையில் இதற்கு பிறகு பேசிய கேஎல்ராகுல் கூறுகையில் “மயங்க் யாதவ் வீசிய ஒரு பந்து என்னை மிகவும் கடினமாகத் தாக்கியது. ஆனால் கடந்த இரண்டு ஆட்டங்களில் மயங்க் பந்துவீசுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டக்அவுட்டில் இரண்டு சீசன்களுக்கு அமைதியாக பொறுமையாக காத்திருந்தார், துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாட முடியாவில்லை. ஆனால் அவர் பம்பாயில் பிசியோக்களுடன் மிகவும் கடினமாக உழைக்கிறார்.
மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவது என்பது எளிதானது அல்ல என்பதை அவர் புரிந்துகொள்கிறார், இளம் வயதில், அவருக்கு சில காயங்கள் இருந்தன ஸ்டம்புகளுக்குப் பின்னால் 20 கெஜம் தூரத்தில் இருந்து பந்து வீசுவதைப் பார்த்து மகிழ்ந்தேன், அவர் பந்துவீசும்போது அங்குதான் இருக்க விரும்புகிறேன் ஏன்றார் ராகுல்.
மேலும் பேசிய அவர் “மொத்தத்தில் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். விக்கெட் சற்று தந்திரமாக இருந்தது மற்றும் சீமர்களுக்கு சில உதவி இருந்தது. குயின்டன் எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். நாங்கள் எடுக்க வேண்டியதை விட 10-15 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். யார்க்கர்களைப் பயன்படுத்தாமல் விக்கெட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பேச்சு. அமைதியாக இருப்பது முக்கியம். எங்கள் ஆட்டத்தை பார்த்தால், அது வேறு விதமாகப் பேசுகிறது என்றார் ராகுல்.