சிஎஸ்கே தோற்றது குறித்து சின்ன தல ரெய்னா போட்டுள்ள உருக்கமான பதிவு.
இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200வது போட்டியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணி இந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும்
இன்றைய ஐபிஎல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 200வது போட்டியாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை அணி இந்த வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் முதற்கொண்டு சென்னை அணியும் விரும்பியது.
ஆனால், முதல் இன்னிங்சில் சென்னை நினைப்பது போல நடக்க வில்லை. ஏனெற்றால் ராஜஸ்தான் அணி பதறுவதற்கு பதிலாக சென்னை அணி பதறியது. குறிப்பாக மெயின் அலி பல விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பை தவற விட்டார். அதே போல பந்துச்சாளர்களும் சரியாக போடவில்லை. கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் பல விக்கெட்டுகளை எடுக்க உதவி செய்த ரவீந்திர ஜடேஜா அதிக ரன்களை வாரி கொடுத்தார்.
ஆனாலும் சில 2 விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார் ஜடேஜா. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து. 176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8 ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி 19 பந்துகளிலே 31 ரன்களை அடித்த நிலையில் அஷ்வின்னிடம் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி 2 சிக்ஸர்கள் அடித்தாலும் இறுதியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த போட்டியின் முலம் ராஜஸ்தான் ராயல்ஸ் தவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரருமான ரைனா தன்னுடைய முகப்பு பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அந்த பதிவில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சரியான ஜோடி. கடைசி ஓவரில் அவர்களின் சிறப்பான ஆட்டம் ஒரு மந்திரம் போல இருக்கும். அவர்களின் இறுதி ஆட்டம் நம்மை எப்பொழுதுமே ஒற்றை காலில் நிற்க வைத்திருக்கும். இறுதியில் அதிர்ஷ்டம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தீர்கல் என்று பதிவிருந்தார். அந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.