நாங்கள் சொல்லியும் ரோஹித் சர்மாவை தோனிதான் 2011 உலக கோப்பையில் சேர்க்கவில்லை – முன்னாள் தேர்வாளர் ஓபன் டாக்.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலை குனியும் தோல்விக்கு முடிவு கட்டுமா என்
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தலை குனியும் தோல்விக்கு முடிவு கட்டுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் முன்னதாக 2011ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறப்பாக செயல்பாடு அப்போது நடைபெற்ற உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தேர்வாகவில்லை.
சொல்லப்போனால் அந்த அணியில் தற்போது கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் ரொம்பவே தடுமாற்றமாக செயல்பட்ட அவர் முதல் 4 வருடங்களில் 57 இன்னிங்ஸில் வெறும் 1248 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்திருந்தார். அதன் காரணமாக மிடில் ஆடரில் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சரித்திரம் படைத்ததற்கும் உதவினார்கள்.
இந்நிலையில் அத்தொடரில் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் 15வது வீரராக ரோகித் சர்மாவை தேர்வு செய்யலாம் என்று ஆதரவு கொடுக்க அப்போது கேப்டனாக இருந்த தோனி மறுப்பு தெரிவித்து பியூஸ் சாவ்லாவை தேர்வு செய்ததாக கிறிஸ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் 2011 உலக கோப்பையை தேர்வு செய்த தேர்வு குழுவில் இடம் பிடித்திருந்த உறுப்பினர் ராஜா வெங்கட் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியஅ அவர் “அந்த உலகக் கோப்பை அணி தேர்வில் ரோஹித் சர்மாவும் திட்டத்தில் இருந்தார். அந்த சமயத்தில் நானும் யாஷ்பால் சர்மாவும் தென்னாபிரிக்காவில் இருந்தோம். ஏனெனில் இந்தியா அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தது. மேலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சுரேந்தர பாவே, நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் சென்னையில் இருந்தனர். எனவே நாங்கள் தேர்வு செய்த அணியை தேர்வுக்குழுவினர் ஏற்றுக்கொண்டார்கள். அப்போது 15வது வீரராக ரோகித் சர்மாவின் பெயரை நாங்கள் பரிந்துரைத்தோம்.
அதற்கு கேரி கிறிஸ்டனும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் கேப்டன் பியூஸ் சாவ்லா இருப்பதை விரும்பினார். அது சரியான முடிவாக இருக்கும் என இறுதியில் கேரி கிறிஸ்டனும் தெரிவித்த காரணத்தால் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. அது பற்றி ரோகித் சர்மாவிடம் தெரிவிப்பதற்கு அவரை சந்திக்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்தாலும் கேப்டன் ப்யூஸ் சாவ்லாவை விரும்புவதால் நாங்களும் ஏற்று கொண்டோம்”
குறிப்பாக 14 வீரர்களை தேர்வு செய்த நாங்கள் கடைசி வீரரின் தேர்வை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களிடம் வழங்கினோம் என்று கூறினார். அதன் காரணமாக ஏமாற்றத்தை சந்தித்த ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் இப்போதும் கூட அது மறக்க முடியாததாக அமைந்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் திறமையை அறிந்திருந்த கேப்டன் தோனி 2011 உலகக்கோப்பைக்கு பின் சேவாக் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் வென்றார் என்பது குறிபிடதக்கது.