ராஜஸ்தான் அணியின் பொருளாதார ரீதியிலான உதவியால் தான் என்னால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிந்தது – யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் அற்புதமாக விளையாடியது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றை 13 பந்துகளில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படித்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்ப
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் அற்புதமாக விளையாடியது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றை 13 பந்துகளில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் படித்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் ஜெய்ஸ்வாலின் பெயரானது இடம்பெற்றது. ஆனால் இவருக்கு இந்த இடம் சாதாரணமாக கிடைக்கவில்லை.
ஏனென்றால் ஏழ்மையான குடுமபத்தை சேர்ந்த ஜெய்ஸ்வால் சிறு வயதில் இருந்து கிரிக்கெட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருகிறார். இவர் சமீபத்தில் கொடுத்திருந்த பெட்டியில் கூட கிரிக்கெட் கிட் வாங்க பணம் இல்லாமல் இருந்ததையும், கிரிக்கெட்டை கற்றுக்கொண்டே பணத்திற்காக பானி பூரி கடையில் வேலை செய்த தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை கூறி அனைவரது மனதிலும் இடம்பிடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜன்தான் அணி தனக்கு உதவி செய்தது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் எனக்கு முக்கியமான ஓன்று என்றால் அது கிரிக்கெட் தான். அதில் தான் என்னுடைய கவனம் முழுவதும் இருக்கிறது. இந்த விஷியத்தை பொறுத்தவரையில் ராஜஸ்த்தான் ராயல்ஸ் அணி எனக்கு பல உதவிகள் செய்தார்கள். குறிப்பாக எனக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து எப்படி பணத்தை சரியாக பயன்படுத்துவது, அதனை எப்படி முதலீடு செய்வது என்பதை பற்றி கற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் இப்படி என்னுடைய பொருளாதார பிரச்னைகளை பார்த்துக்கொண்டதால் என்னால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது.
அதற்கு நான் எப்போதும் கடமை பட்டவனாக இருப்பேன், இப்படி பல வீரர்களுக்கு உதவி செய்யும் அணைத்து அணிகளையும் நான் மதிக்கிறேன். தற்போது என்னை நானே நன்றாக பற்றுக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டேன். முதலாவதாக நான் எடுக்கும் முடிவுகளை நம்புகிறேன், இரண்டாவது பணத்தை எனக்கு தேவயானவற்றிக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். எடுத்துக்காட்டாக நல்ல உணவு, குடுப்பதிற்கு நல்ல வீடு போன்றவைகளில் செலவு செய்கிறேன்.
நான் அதிகமாக செலவு செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் அப்படி செலவு செய்வது தேவையில்லாத காரியத்திற்கு கிடையாது. நான் கடந்த மூன்று, நன்கு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறேன். எனவே எத்தனை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்ற அனுபவம் எனக்கு வந்துவிட்டது. சில தவறுகளை செய்திருக்கிறேன் , இருந்த போதிலும் அதனை சரிசெய்து கொண்டு போட்டியில் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் டெஸ்ட் குழுவில் இடம்பெற்றுள்ளார். ஒருவேளை இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்ச்சத்தில் கடிப்பாக உலக கோப்பையில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக குறைப்படுகிறது.