ஐபிஎல் போட்டியில் முதல் அரை சதம்…ராணுவ வீரர் அப்பாவுக்கு சல்யூட் அடித்து தன் திறமையை காட்டிய துருவ் ஜுரேல்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை அணி பந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை அணி பந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இரண்டாவது போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதற்க்கு முந்தைய போட்டியில் வற்றி பெற்று இருந்தது.
அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ன்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது என்று சொல்லலாம். லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக ஆரம்பித்து இருந்தனர். ஆனால் அதன் பின் லக்னோ அணியின் மிடில் ஆர்டர்ரில் வந்த வீரர்களும் அதே போல் கேப்டன் கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து இருந்தனர். இருப்பினும் ராஜஸ்தான் அணியின் சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் எளிதாக வெறி பெற்று விட்டனர்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை அடித்து இருந்தது. இதில் தொடக்க வீரர் டி காக் எட்டு ரன்களும் அதன் பின் வந்த ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்து இருந்தனர். இதில் அதிக பட்சமாக கே.எல்ராகுல் 76 ரன்களும் தீபக் ஹூடா 50 ரன்களையும் அடித்து இருந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் சந்தீப் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளையும் போல்ட், அவேஷ் கான் மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இலக்கை 19 வது ஓவர்கள் முடிவிலேயே எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.இதில் கேப்டன் பொறுப்பிற்கு ஏற்றார் போல் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இருந்தார். அதில் அதிகபட்சமாக சஞ்சு சம்சன் 71 ரன்களும் ஜுரேல் 52 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்த வெற்றிக்கு காரணம் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு தொடக்கத்தை அளித்து இருந்தார்கள். லக்னோ அணி சார்பில் அமித மிஸ்ரா, ஸ்டோய்னிஸ் மற்றும் யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
இந்த தோல்விக்கு காரணம் லக்னோ அணியின் தொடக்க வீரர் டிகாக் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை அது மட்டும்மல்லாமல் மிடில் ஆர்டரில் வந்த வீரர்களும் தங்களது கடமைக்கு ஏற்றார் போல் விளையாடவில்லை. பேட்டிங் தான் அவ்வாறு உள்ளது என்று பார்த்தல் பீல்டிங் சுமாராக தான் இருந்தது. எளிதான கேட்ச்களை கூட அவர்கள் எடுக்க வில்லை.அதுவும் ஒரு தோல்விக்கு காரணமாக அமைந்தது