தோற்றால் கூட பரவாயில்லை. நீங்கள் தான் போராடவே இல்லையே!- பாக்.வீரர்களை சாடிய முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா.

நீங்க தான் போராடவே இல்லையே பாகிஸ்தான் வீரர்களை தாக்கிய ரமீஸ் ராஜா. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில்

By ·

நீங்க தான் போராடவே இல்லையே பாகிஸ்தான் வீரர்களை தாக்கிய ரமீஸ் ராஜா. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் மிகக் கூட்டம் இங்கு அதிகமாக இருந்ததும் அதனால் உருவாகும் அழுத்தத்தையும் நான் புரிந்து கொள்கிறேன் என்றும் தான் பாபர் அசாம் இந்த அணியை நான்கு ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார். எனவே நீங்கள் அந்த சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டும் உங்களால் வெற்றி பெற இயல முடியாமல் விட்டாலும் நீங்கள் கடுமையான போட்டியினை தந்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் பாகிஸ்தான் இதை செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலக கோப்பையின் வரலாற்றை தக்க வைத்ததற்கு இந்திய அணிக்கு பாராட்டுக்கள். ஆனால் அது எளிதான காரியம் கிடையாது.

ரஷீம் ராஜா கூறியது

வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மிக அழுத்தத்தில் தான் இந்திய அணி விளையாடியது ஆனால் அவர்கள் அந்த அழுத்தத்தை சிறப்பாகவே கையாண்டு வெற்றி பெற்றனர். பாபர் அசாம் இளம் வீரர்களை வைத்து இதற்கு ஒரு முடிவை காண வேண்டும். எங்களது பாகிஸ்தான் சுழற் பந்தில் மிகப் போராடி வருகிறது. அதேபோல் 50 மற்றும் 49 ரன்கள் அடித்தவுடன் வீரர்கள் தனது விக்கெட்டை இழுந்து வெளியேறாமல் நின்று நிதானமாக விளையாடி பணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் கூறியிருக்கிறார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை