கேட்சை விட்டதற்கு இப்படி ஒரு தண்டனையா? பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங் குறித்து ரமிஸ் ராஜா.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலியா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 367 ரன்களை குவித்தது. இந்நி
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வந்தது. ஆஸ்திரேலியா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 367 ரன்களை குவித்தது. இந்நிலையில் இந்த ரன் குவிப்பிற்கு ஆஸ்திரேலியா உழைத்திருந்தாலும் அதற்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங் தான்.
ஏனென்றால் 124 பந்துகளில் 163 ரன்களை விளாசிய டேவிட் வார்னரை 10 ரங்களிலுயே ஆட்டமிழக்க செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை பாகிஸ்தான் அணியில் பில்டர் கேட்சை தவறவிட்டதினால் அதற்கான விலையாக தோல்வியை தழுவியது பாகிஸ்தான். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தீராத கதையாக இருந்துவரும் மோசமான பீல்டிங் குறித்து பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரரும் முன்னாள் பாகிஸ்தான் அணியின் சேர்மேனுமாகிய ரமிஸ் ராஜா.
அவர் கூறுகையில் “போட்டியின் போது கேட்ச்சுகளை விட்டதற்கு யாரும் இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பதை நான் பார்த்ததில்லை. நிறைய கேட்ச்களை பாகிஸ்தான் அணியானது தவறவிட்டது. ஆனால் இதனை காரணமாக 150-160 ரன்கள் எடுத்தவர்களை நான் பார்த்ததில்லை. எனவே பாகிஸ்தானுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. எனவே நீங்கள் கேட்சுகளை சரியாக பிடிக்கும் வரையில் தொடர்ந்து இதோ தண்டிக்கப்படுவீர்கள்.
ஒருமுறை நீங்கள் வேகத்தை இழந்தால், அதை மீண்டும் பெற்று அந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது கடினம். அடுத்த போட்டி சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்க உள்ளது. எனவே இது எளிதான போட்டியாக இருக்காது, ஏனெனில் பாகிஸ்தானின் பேட்டர்கள் சரியாக சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடவில்லை.
நிறைய விஷயங்களை சரிசெய்ய வேண்டும். இந்த பந்துவீச்சு ஒரு மாதத்திற்கு முன்பு உலகத் தரம் வாய்ந்ததாக இருந்தது, நீங்கள் 365 ரன்களை விட்டுக் கொடுத்தால் அதற்கு தகுந்த விவாதங்கள் நடக்க வேண்டும். நீங்கள் தற்காப்பு பந்துவீச்சைச் செய்யும்போது, உங்களால் ஏன் லெங்த் பந்துகளை தொடர்ந்து வீச முடியவில்லை? ஒருவேளை விக்கெட் எடுக்கும் பந்துகளை உங்களினால் வீச முடியவில்லையா?
எதிராணியிடம் இருந்து சற்று கடுமையான எதிர்ப்பு வரும்போதெல்லாம் பாகிஸ்தான் உறைந்துபோகிறது. உலகக் கோப்பை வெல்ல இருக்கும் அணி இப்படிப் பின்னடைவைச் சந்திக்கிறது. ஜெயிக்கவில்லை என்றால் எப்படி ஜெயிப்பது என்பதை மறந்துவிடுவீர்கள். நல்ல ஆடுகளத்தில் எப்படி பேட் செய்ய முடியும் என்பதை ஆஸ்திரேலியா காட்டியது. 60 மற்றும் 70ரன்கள் எடுப்பது நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை நான் பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறேன் எண்டு கூறியுள்ளார் ரமிஸ் ராஜா