வீடியோ : காயத்தில் இருந்து நூலிலையில் தப்பித்த ரஷீத் கான், அபார வெற்றி பெற்ற குஜராத்.
உலக டி20 போட்டிகளில் அதிகம் விரும்பப்படும் லீக் என்றால் அது ஐபிஎல் தான். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் 16 சீசன் நடந்து வருகிறது, இதுவரை இந்த சீசனின் 29 போட்டிகள் நடைபெற்றுள்ளன, இன்று இந்த சீசனின் 30வது ஆட்டம் லக
உலக டி20 போட்டிகளில் அதிகம் விரும்பப்படும் லீக் என்றால் அது ஐபிஎல் தான். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் 16 சீசன் நடந்து வருகிறது, இதுவரை இந்த சீசனின் 29 போட்டிகள் நடைபெற்றுள்ளன, இன்று இந்த சீசனின் 30வது ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த அதிரடியான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவரில் ஸ்கோர் போர்டில் 135 ரன்கள் சேர்த்தனர். இந்த சுலபமான இலக்கை துரத்திய லக்னோ சிறப்பாக விளையாடினாலும் கட்சி ஓவரில் யாருமே எதிர்பாராத வண்ணம் 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை தழுவியது.
ஆனால் தொடக்கத்தில் இந்த இலக்கை துரத்த வந்த லக்னோ பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இதன் போது மூன்றாவது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த இதன் போது லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார். இருப்பினும் இந்த மூன்று பவுண்டரிகளில் மூன்றாவது பவுண்ட்டிரின் போது ரன்கள் செல்வதை காப்பாற்ற ரஷித் கான் வேகமாக பந்தை துரத்திக்கொண்டு ஓடினார்.
ஆனால் அவரை பவுண்டரி செல்வதை தடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் தான் ரஷீத் கான் வேகமாக ஓடி வரும் போது அவருக்கு நேராக பால் பாய் இருந்தார். எனவே அவருக்கு அடிபடக்கூடாது என்று முயற்சிக்கும் போது அவன் மீது நேரடியாக சென்று மோதினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வின் போது சிறிய தவறு செய்திருந்தாலும் ரஷித் கானுக்கு கண்டிப்பாக பெரிய அடி பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஐபிஎல் 2023ல் இதுவரை ரஷித் கானின் ஆட்டம் எப்படி இருக்கிறது?
— Nitish Kushwaha (@official_nitis) April 22, 2023
ஐபிஎல் 2023 தொடரை பொருத்தவரையில் ரஷித் கான் இதுவரை குஜராத் அணிக்காக மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 8.30 சராசரியுடன் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் 2023ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.