இந்தியா ஐசிசி போட்டிகளில் அசத்த முடியாமல் போவதற்கு காரணம் இதுதான் – பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளனர். சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்ப

By ·

உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளனர். சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா முழுவதுமாக சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட உள்ளது வரும் அக்டோபர் மாதம் முதல் விளையாட இருக்கிறது.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை சிறப்பாக நடத்துவதற்காக போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய மைதானங்களை நவீனப்படுத்தவும் பிசிசிஐ பல கோடிகளை நிதியாக ஒதுக்கி வேலைகளை துவங்கியுள்ளது.

மேலும் இந்திய அணியில் நிலவும் சில வீரர்களின் பற்றாக்குறை குறித்தும் பல விதமான ஏற்பாடுகளை செய்து வீரர்களை சோதித்து வருகிறது இந்தியா. அதற்கு முதற்ப்படியாகத்தான் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இந்திய அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சோதிக்கப்டடது. குறிப்பாக 4வது இடத்தில யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி நிலவி வரும் நிலையில் தான் பாஸ்கிதான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் இந்தியா பஐசிசி போட்டியில் தோல்வியடைவது குறித்து பேசியுள்ளது.

அவர் கூறுகையில் “விராட் கோலிக்கு ஒரு திசையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் வெற்றி பெற விரும்பினார். ஆனால் பின்னர் அவர் கேப்டன் பதவியில் நீக்கப்பட்டார். மேலும் சில உள் பிரச்சினைகளால் அணியால் செயல்பட முடியவில்லை. அவர்களால் ஐசிசி போட்டிகளில் விளைசரியாக யாட முடியவில்லை. ஒருவேளை கேப்டன் விரும்பிய வீரர்கள் அணிக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது ஒருவேளை அவருக்கு கிடைத்து அவர்களை சரியாக உபயோகப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

தற்போது இரண்டு பெரிய விளையாட்டுகள் உள்ளன. இலங்கையில் ஆசிய கோப்பை மற்றும் உள்நாட்டில் உலகக் கோப்பை போட்டியானது நடைபெற இருக்கிறது. இப்போதும் கூட இந்திய அணி இன்னும் சரியாக உள்ளது. அவர்களுக்கு நம்பர்.4ல் வீரர் கிடைப்பார். ஆனால் போட்டியின் போது டாப்-3 விரைவில் நீக்கப்படும் போது தான் பிரச்சனையே தொடங்குகிறது. டாப்-3 வீரர்கள் 25-30 ஓவர்களில் விளையாடினால் இந்திய எளிதாக வெற்றி பெரும்.

ஆனால் அவர்களின் பிரச்சினை என்னவென்றால் டாப்-3 முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படி தற்போது செயல்படவில்லை என்பதுதான். அவர்கள் ஷிகர் தவானை மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஏனென்டர்ல ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு சுற்றுப்பயணத்தின் போது அவரை கேப்டனாக நியமித்தார்கள். இந்தியாவிடம் சரியான வீரர்கள் இருந்தாலும் அவர்களை அங்கும் இங்கும் எரித்து விட்டனர் என்று கூறியுள்ளார் பாஸ்கிதான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை