விராட் கோலி மட்டும் இப்போது கேப்டனாக இருந்தால் இந்தியா எப்படி இருக்கும் தெரியுமா? முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆதங்கம்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
ஆனாலும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கீப்பர் பற்றியும் குறிப்பாக 4வது இடத்தில் யார் இறங்க போகின்றனர் என்பது பற்றியும் பேசிய சர்ச்சை தற்போது நிகழ்ந்து வருகிறது. ஏனென்றால் அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிளகாகும் பட்சத்தில் 3 மற்றும் 4 வது வீரர் தான் நிலையாக நின்று விக்கெட்டுகள் விழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு கடந்த வருடங்களில் ஸ்ரேயஸ் ஐயற் மிகவும் திறமையாகாவே செயல்பட்டார்.
ஆனால் அவருக்கு காயம் ஏற்பாடு தற்போதுதான் திருப்பியுள்ளதால், உலக கோப்பையில் விளையாடுவார் என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சூரிய குமார் யாதவ் வது இடத்தில் சரியாக இருப்பார் என்று எதிர்பார்கப்பட்டது குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதற்குள் அசால்டாக 3 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் 511 ரன்களை 24.33 என்ற மோசமான சராசரியில் எனேற்றம் தந்துள்ளார்.
இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசிய அவர் கூறுகையில் “இந்திய அணி நிர்வாகம் ஏராளமான வீரர்களை வைத்து அவர்களது அணியில் சோதனைகளை செய்து வருகிறது. அவர்களுடைய பேட்டிங்கை பற்றி நீங்கள் பேசும் போது 4 முதல் 7 வரையிலான மிடில் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் அடிக்கடி மாற்றங்கள் செய்து வருவதினால் அவர்களினால் சரியாக செட்டிலாகி முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எந்த புதிய வீரர்களையும் நிலையாக செட்டிலாகி விளையாட விடவில்லை
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இன்னமும் காயத்திலிருந்து விளையாட முடியாத நிலையில் மிகப்பெரிய ரிஸ்க் அக இது அமையலாம். ஒருவேளை அவர்கள் விராட் கோலியை கேப்டனாக அனுமதித்திருந்தால் இந்நேரம் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தயாராக 100% இருந்திருக்கும். தற்போதைய ஆசிய அணிகளில் மிடில் ஓவர்களில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் பிரச்சினை ஒரு குறையாக நான் பார்க்கிறேன்.
ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளில் உள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை ஸ்வீப் போன்ற ஷாட்களை அடித்து அதிரடியாக விளையாடுகின்றனர். மேலும் மொய்ன் அலி, அடில் ரசித் போன்றவர்கள் விக்கெட்டை எடுப்பதில் கவனம் செலுத்தும் நிலையில் நம்முடைய ஸ்பின்னர்கள் குறைந்த எக்கனாமியில் மட்டுமே பந்து வீசுவதில் கவனம் செலுத்துகின்றனர். இது இந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ஆசிய அணிகளுக்கு எந்த சாதகத்தையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன் என்றார் அவர்.