அஸ்வின் வந்திருந்தா 190 ரன் கூட எடுத்திருக்காது – விமர்சித்த முன்னாள் பாக் கேப்டன் ரஷீத் லத்தீப்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை போட்டியானது தற்போது சுறுசுறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. அணிகள் பல கிட்டத்தட்ட 3 போட்டிகளுக்கே மேலாக விளையாடி விட்டனர். இந்நிலையில் உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடைபெற்றத

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை போட்டியானது தற்போது சுறுசுறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. அணிகள் பல கிட்டத்தட்ட 3 போட்டிகளுக்கே மேலாக விளையாடி விட்டனர். இந்நிலையில் உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான விளையாட்டை விளையாடியது.

சொல்லப்போனால் பாகிஸ்தான் அணியானது 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு முன்னர் நிலைகுலைந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது, மேலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “குல்தீப்பிற்கு எதிராக நாங்கள் கூச்ச சுபாவத்துடன் மைதானத்தில் காணப்பட்டோம். நாங்கள் அவருடைய பத்து ஓவர்களை விளையாட முயற்சித்தோம். ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கூட குல்தீப்பை யாதவை சரியாக கைலாய முடியவில்லை.

மேலும் ஒரு சில போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கவில்லை என்றால், குல்தீப் இந்த தொடரின் முன்னணி விக்கெட் எடுத்தவராக இருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியாவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று அவர் கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் அஸ்வின் விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் அஸ்வின் குறித்து பேசுகையில் “இந்தியா அஸ்வினை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அஸ்வின் விளையாடியிருந்தால் 190 ரன்களைக் கூட எங்களால் எடுத்திருக்க முடியாது என்று லத்தீப் கூறினார். இந்நிலையில் “பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்கில் 191 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை