“தோனி ஒரு கேப்டன் கிடையாது” காரணம் இதுதான் அஸ்வின் ஆச்சரிய கருத்து.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போ

By ·

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 3 வகையான உலக கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. மேலும் இதில் முக்கியமான ஓன்று என்னவென்றால் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தது தான். குறிப்பாக அஸ்வின், ஜடேஜா, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல வீரர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்.

இந்நிலையில் தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் வரும் உலக கோப்பையில் இந்திய அணியானது தோனி இல்லாமல் விளையாட இருக்கிறது. மேலும் தற்போது உள்ள இந்திய அணியானது ரோஹித் சர்மா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2011 உலக கோப்பை போலவே இந்தியா கேப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து பேசியுள்ளார் தமிழ்நாட்டின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் பேசுகையில் “தோனி ஒரு கேப்டன் அல்ல, அவர் ஒரு இயக்குனர். அவர் உண்மையில் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர், அதாவது அவர் விளையாட்டிற்கான இயக்குனராக இருக்கிறார். ஒரு திரைப்பட இயக்குனர் என்ன செய்வார்? அவர் படத்தில் அவரும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அந்த கதாபாத்திரத்திற்கான சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

அதே போல தோனியின் தலையில் அவர் ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்கிறார், அந்த கதாபாத்திரம் எங்கு பொருந்துகிறது, அந்த கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று அவருக்குத் தெரியும், மேலும் அந்த நபருக்கு தனது பாத்திரத்தில் நடிக்க சரியான சூழ்நிலையை வழங்குகிறார். அவர் சுரேஷ் ரெய்னாவுக்கும் 2011 ODI உலகக் கோப்பையின் போது அதைத்தான் செய்தார். என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் ஹர்ஷா போக்லேவிடம் பேசும் போது கூறினார்.

இந்நிலையில் அஸ்வின் இந்த உலக கோப்பையின் தொடக்கத்தில் விளையாடும் இந்திய அணையில் இடம்பெற வில்லை. ஆனால் பயிற்சயின் போது ஆல்ரவுண்டர் ஆக்ஸர் படேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாததினால் அஸ்வினுக்கு இந்த உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அஸ்வின் இந்த உலக கோப்பையில் விளையாடுவதை பலரும் வரவேற்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை