யாராவது பௌலர்களை காப்பாத்துங்க, ப்ளஸ்… அஸ்வின் அதிர்ச்சி பதிவு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் முன்னேறிக்கொடு வரும் நிலையில் புதிய விதிகளும் இந்த தொடரில் சேர்க்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு ஓவரில்

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் முன்னேறிக்கொடு வரும் நிலையில் புதிய விதிகளும் இந்த தொடரில் சேர்க்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள். இம்பேக்ட் விதி. டாஸில் பிளேயர் ஷீட் இல்லை புதிய டிஆர்எஸ் முறை என் பலவிதமான விஷியங்கள் மாறியுள்ளது.

இந்த இந்த ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் பேட்டிங்கிற்கு ஏதுவான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக இம்பேக்ட் விதி பெரும் பதிவை ஐபிஎல் போட்டியில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னரெல்லாம் மேலிருக்கும் பேட்ஸ்மேன்களை அவுட் செய்யதால் பின்னர் வரும் பேட்ஸ்மேங்கள் மட்டுமே அணியை காப்பாற்ற போராடுவார்கள் அதி சுவாரஸ்யத்தையும், ஆல் ரவுண்டர்களுக்கு தங்களுடைய திறமையை காட்டும் தருணத்தையும் கொடுக்கும்.

ஆனால் தற்போது உள்ள இம்பேக்ட் விதியால் அணியில் மேலும் ஒரு பந்துவீச்சாளரையோ அல்லது ஒரு பேட்ஸ்மேனையோ அணியில் ஏற்பதினால் 11 பேர் என்ற விளையாட்டு 12 பேராக மாறுகிறது. இது போட்டியின் சுவாரஸ்யத்தை குறைப்பது மட்டுமல்லாமல் ஆள் ரவுண்டர்களுக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைகிறது. இதனால் எதிர்காலத்தில் ஆள் அவுக்கற்களுக்கான மவுசு என்பது வெகுவாக குறையும்.

அதன் பின் வந்த வீரர்களும் அந்த வேகத்தை அப்படியே கொண்டு சென்றனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்களை குவித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்டி விளையாடி இருந்தார்கள். அதன் மூலம் இமாலய இலக்காக 262 ரன்களை அடித்து வரலாற்று சாதனை ஒன்றை படைத்தது.பஞ்சாப் அணி இந்த இலக்கை எட்டாது என்று நினைத்து கொண்டு இருந்த பலரும் இந்த போட்டியை பார்த்து உறைந்து போய் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தான் வரலாற்று சாதனை படைத்த நிகழ்ந்துள்ள நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் : பந்துவீச்சாளர்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் மூலம் தன்னுடைய விரக்தியை அஸ்வின் தெரிவித்திருப்பது நன்றாக தெரிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை