இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இதனை செய்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் – ரவி சாஸ்திரி ஓபன் டாக்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியாது நேபாளத்துக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று இந்தியாவின் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசைக்கும் பாகிஸ்தானின் வலிமையான வேகத் பந்துவீச்சு தாக்குதலுக்கும் இடையிலான போட்டியாகும். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, மறுபிரவேச வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மான் கில் போன்றவர்கள், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் போன்ற உலக கிரிக்கெட்டின் சில கடுமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோத இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் சமீப காலங்களில் பாகிஸ்தான் மிகச்சிறப்பாக செயல்பட்டு பெரிய சவாலை கொடுக்கும் அணியாக முன்னேறியுள்ளதால் கவனத்துடன் விளையாட வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் “இந்தியா வெற்றி பெறும் அணியாக களமிறங்கும் என்று நான் சொல்வேன். ஏனெனில் 2011க்குப்பின் மிகவும் வலுவாக கலையான வீரர்களைக் கொண்டுள்ள இந்த அணி இருக்கிறது. மேலும் அனுபவமுள்ள கேப்டன் தன்னுடைய அணியை நன்கு புரிந்து வைத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் பாகிஸ்தான் வெற்றி விகிதத்தின் இடைவெளியை குறைத்துள்ளது. குறிப்பாக கடந்த 7 – 8 வருடங்களுக்கு முன்பு பலம் மற்றும் வீரர்களின் தரம் என்று பார்த்தால் ஒரு இடைவெளி இருந்தது.
ஆனால் பாகிஸ்தான் அதை குறைத்துள்ளது. எனவே தற்போது நல்ல அணியாக இருக்கும் அவர்களை வீழ்த்த உங்களுடைய விளையாட்டின் மேல் நீங்கள் இருக்க வேண்டும். எனவே எதிர்பார்ப்புகளை பார்க்காமல் இப்போட்டியையும் மற்றொரு போட்டியை அணுகுங்கள். ஏனெனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் மனதளவில் தடுமாற வாய்ப்பு ஏற்படலாம். பொதுவாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் யார் பொறுமையாக இருந்து அழுத்தத்தை கையாள்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி செல்கிறது”
“அத்துடன் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் நல்ல ஃபார்மில் இருப்பவர்களால் மட்டும் சாதிக்க முடியாது. அதாவது கடந்த 6 மாதங்களாக சுமாராக செயல்பட்ட சில வீரர்கள் இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மனதளவிலான பலத்தால் சாதிப்பார்கள். இந்த போட்டியின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியும். அதனால் அதை எங்கே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்” என்று கூறினார்.