பயிற்சி ஆட்டத்தை மட்டுமே வைத்து முடிவு செய்யாதீர்கள் – இந்தியாவின் நட்சத்திர வீரர் குறித்து ரவி சாஸ்திரி ஓபன் டாக்.
முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் ஆகியோர் ஆசிய கோப்பை 2023 மற்றும் ODI உலகக் கோப்பை 2023 உடன் இந்திய கிரிக்கெட் அணியின் அமைப்பை குறித்து முக்கியமான கருத்துக்களை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேல
முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் ஆகியோர் ஆசிய கோப்பை 2023 மற்றும் ODI உலகக் கோப்பை 2023 உடன் இந்திய கிரிக்கெட் அணியின் அமைப்பை குறித்து முக்கியமான கருத்துக்களை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் பும்ரா போட்டியில் காம்பேக் கொடுப்பது குறித்தும், அவரின் செயல்பாடு குறித்தும் பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.
அவர் கூறுகையில் “நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆல்-ரவுண்டர்களான அக்சர் மற்றும் ஷர்துல் இருவருடனும் நான் செல்வேன். அது எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது. மேலும் அங்குள்ள கீப்பருக்கு ஏதாவது நேர்ந்தால் சஞ்சு சாம்சனை பேக்கப் ஆகி வைத்திருக்கலாம். அவர் அப்படியே காலத்தில் மாற்று விக்கெட் கீப்பராக இறங்கி விடுவார்
இப்போது நீங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுடன் தொடங்குகிறீர்கள், ஏனென்றால் எனக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியம். உங்களுக்கு நான்கு பேர் தேவைப்பட்டால், உங்களிடம் ஏற்கனவே ஒரு ஆல்-ரவுண்டர் பாண்டியா இருக்கிறார், எனவே, பும்ரா ஃபிட்டாக இருந்தால், அவர் உள்ளே வரவைக்கலாம். மேலும் ஷமி இருக்கிறார். அதோடு நீங்கள் சிராஜை ஒரு தர்க்காப்புப் பந்துவீச்சாளராக வைத்துக்கொள்ளலாம்.
இவர்களோடு தேவைப்பட்டால் ஷர்துல் தாகூரை இணைத்து கொள்ளலாம். ஷர்துல் மேற்கிந்தியத் தீவுகளின் ஒரு நாள் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டார் எனவே அவரை ஒரு பேக்கப் வீரராக வைத்திடுகளாம். பிறகு உங்களுக்கு இன்னும் ஒரு இடம் இருக்கிறது என்றார் ரவி சாஸ்திரி.
மேலும் பேசிய அவர் கூறுகையில் ” பும்ரா முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பது அவர் போட்டிகளில் விளையாடுவதைப் பார்த்தால் மட்டுமே தெரியும். அப்போதுதான் நியாயமான ஒன்றாக இருக்கும். வலையில் பந்துவீசிய எந்த ஒரு வீரர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடப் போவதில்லை. ஏனென்றால் உடற்தகுதி என்று ஒன்று உள்ளது, மேலும் மேட்ச் ஃபிட்னஸ் என்று ஒன்று உள்ளது. எனவே இந்த மூன்று ஆட்டங்களும் ஜஸ்பிரிட்டுக்கு மிகவும் முக்கியமானது என்றார் சாஸ்திரி.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி தேர்வு குறித்து பேசுகையில் “1983 உலக கோப்பையை நினைவில் கொள்ள வேண்டும் என்பதால் ரவி சொன்னதைக் கடைப்பிடிப்பேன். எங்கள் அணியில் பல ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர், அணியில் ஆல்-ரவுண்டர்கள் இருப்பது உங்களுக்கு பல நல்ல வகைகளை தருகிறது. எனவே நீங்கள் யாரையும் தேர்வு செய்யலாம் என்றார் பாட்டீல்.