டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் இந்தியாவிற்கு விக்கெட் கீப்பர் யார்? – ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி.

ஐபிஎல் 2023 முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரோஹித் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெட்ரா ஆகவேண்டிய நிலையில் டீம்

By ·

ஐபிஎல் 2023 முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. வரும் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரோஹித் சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெட்ரா ஆகவேண்டிய நிலையில் டீம் இந்தியாவிற்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் சில சிக்கல்கள் நிலவுவதாக தெரிகிறது.

ஏனென்றால் கே.எல். ராகுலின் காயம் மற்றும் ரிஷப் பந்த் இல்லாததால் இவர்களுக்கு பதிலாக இஷான் கிஷானை இந்தியாவின் WTC இறுதி அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே கே.எஸ்.பாரத் இருப்பதால் இஷான் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பந்துச்சுக்கு தகுந்தவாறு கீப்பரை தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியில் பேசிய போது “இந்த உலகக்கோப்பை டெஸ்ட் போட்டிக்கும் கீப்பரை தேர்வு செய்யும் போது அணியல் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் கீப்பராக கே.எஸ். பரத்தை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில் 4 வேகப்பந்து வீச்சர்களும் ஒரு சுழற்பந்து வீச்சாளரும் இருக்கும் போது இஷான் கிஷனை தேர்வு செய்யலாம். ஆறாவதாக ஜடேஜா, ஏழாவதாக ஷமி, எட்டாவதாக சிராஜ், ஒன்பதாவதாக ஷர்டுல் தாகூர். 11 வது அஷ்வின் , 12 உமேஷ் விளையாடலாம்.

ஆனால் அது மைத்தனத்தில் உள்ள நிலையை பொறுத்தது. நன்கு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடும் போது ஷமி, சிராஜ், உம்மஹ்ஸ், ஷர்டுல் தாகூர் உள்ளிட்டோர் விளையாடலாம். அதே நேரத்தில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் வானிலை சரியாகவும் சூரியன் இருக்கும் போதும் சூழல் பந்து வீச்சாளர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவை பயன்படுத்தலாம் என்றார்.

ஏனெற்றால் வானிலை மேகமூட்டமாக இருக்கும் போது, ​​வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் காட்டிலும் விக்கெட்டில் இருந்து அதிக மதிப்பைப் பெறுவார்கள் என்பது பொதுவான கருத்து. ரவி சாஸ்திரி கூறுவதை ஒருவாயில் ஒப்புக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற சூழ்நிலைகளில் அணியை சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இஷான் கிஷான் மற்றும் கே.எஸ்.பரத் பற்றி பேசுகையில் “கே.எஸ்.பரத் இந்திய டெஸ்ட் அணிக்காக முன்னரே விளையாடியிருக்கிறார். 4 போட்டிங்களில் 20.20 சராசையுடன் 101 ரன்களை எடுத்துள்ளார். இவர் கடைசியாக பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடினார். மறுபக்கம் இஷான் கிஷான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை