நீங்க தான் உலக சம்பியனா? வருத்தப்படவே மாட்டிங்களா – இங்கிலந்து அணியை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்த முறை இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் தடுமாறி வருகிறது. 6 போட்டிகளை விளையாடியுள்ள இங்கிலாந்து அதில் 1 போட்டியை மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் அகலபாதாளத்தில் 10 வது இடத்தில் இருக்கிறது. இதனால் இங

By ·

கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்த முறை இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் தடுமாறி வருகிறது. 6 போட்டிகளை விளையாடியுள்ள இங்கிலாந்து அதில் 1 போட்டியை மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் அகலபாதாளத்தில் 10 வது இடத்தில் இருக்கிறது. இதனால் இங்கிருந்து மீண்டு வருவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்தியாவை எதிகொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசினாலும் பேட்டிங்கில் இந்திய அணிக்கு எதிராக பெரும் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை என்பது குறைவாக இருந்தது போல தெரிந்தது. மேலும் விக்கெட் விழுந்ததும் அதற்கு அடுத்து நிறுத்தி ஆடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இங்கிலந்தின் தோல்விக்கு காரணமாகியது.

இந்நிலையில் தான் இங்கிலாந்து அணியின் இந்த மோசமான நிலை குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி. அவர் பேசுகையில் “பார்வையாளர்கள் மற்றும் இங்கிலாந்து அணியின் ஆதரவாளர்களுக்கு இங்கிலாந்து அணி பெரும் பேரிழிவை கொடுத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் தோற்ற முதல் போட்டியில், நியூசிலாந்து அவர்களை தோற்கடிக்கும் போது 17 ஓவர்கள் ஆட்டம் மீதம் இருந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவரில் ஆல் அவுட் ஆனது. அந்த ஆட்டம் முன்கூட்டியே முடிந்தது. பின்னர் அவர்கள் இலங்கைக்கு எதிராக 30 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. அங்கு இலக்கை அணியை துரத்தி 25 ஓவர்களில் போட்டியை முடித்தது. இன்று 32 ஓவர்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த மாதிரியான நிலையில் நீங்கள் உங்களை உலக சாம்பியன்கள் என்று அழைக்கிறீர்களா? அதாவது, அவர்களின் விளையாட்டை பற்றி அவர்கள் வருத்தப்படவில்லை என்றால்.

யார் தான் வருத்தப்படுவார்கள். இங்கிருந்து இங்கிலாந்து பெருமைக்காக விளையாட வேண்டும். நான் அதைச் சொல்வதற்குக் காரணம், இப்போது அவர்கள் புள்ளிகள் பட்டியலில் கீழே இருக்கிறார்கள்.

மேலும் 2025-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு, உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும். எனவே, இங்கிலாந்து கடைசி இரண்டு இடத்தில் இருந்தால், அவர்களைப் போன்ற ஒரு அணி ஐசிசி போட்டியில் விளையாடாதது எவ்வளவு பெரிய அடியாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறினார் சாஸ்திரி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை