ஷிகர் தவானுக்கு உரித்தான மதிப்பை மக்கள் கொடுக்கவே இல்லை – ரவி சாஸ்திரி வருத்தம்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

ஆனாலும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கீப்பர் பற்றியும் குறிப்பாக 4வது இடத்தில் யார் இறங்க போகின்றனர் என்பது பற்றியும் பேசிய சர்ச்சை தற்போது நிகழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்த போது வலது மற்றும் இடது கை வரிசை என்பது சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஷிகர் தாவன் தற்போது உள்ள இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்பது தெரிகிறது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கூட ஷுகர் தவானின் பெயர் இல்லை எனது பலருக்கும் வருத்தம் தந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் ஷிகர் தவான் பற்றி பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில் “அணியின் தொடக்க வீரர்களாக களமிறகுக்கும் வீரர்கள் எந்த சூழ்நிலையிலும் செயல்படும் படி நெகிழ்வாக இருக்க வேண்டும். ரோஹித், விராட் மற்றும் ஷுப்மான் கில் முறையே 2,3,4 வது இடங்களில் இருக்கலாம். மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தேன்.

அப்போது நான் பல முறை ஷிகர் தவானுக்குத் தகுதியான மதிப்பை மக்கள் வழங்கவில்லை என்று நான் தொடர்ந்து கூறுகிறேன். அதாவது ஷிகர் தவான் ஒரு அற்புதமான வீரர். 2019 உலகக் கோப்பையைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றார் அந்த தொடரில் நாங்கள் அந்த அரையிறுதியில் தோல்வியை தழுவினோம். அந்த உலகக் கோப்பையை போட்டியின் போது ​​​​அவர் காயம் காரணமாக அணியில் இல்லாமல் போனவர். உங்களுக்குத் இப்படி போன்ற ஒரு வீரர் அணியில் இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

மேலும் அணியின் மேல் ஆர்டரில் ஒரு இடது கை வீரர் இருப்பது மூன்று வலது கை வீரர்களுக்கு பந்து ஸ்விங்கிங் செய்யும் படியான ஒன்றாக இருக்கும். மேலும் அந்த விஷாயத்தினால் அணி நிலையாக இருக்க முடியும் என்றார் ரவி சாஸ்திரி. மேலும் பேசிய ரவி சாஸ்திரி வரும் முக்கிய தொடர்களில் இந்தியாவின் டாப் 7 இடங்களில் 2 இடது கை வீரர்கள் இருக்க வேண்டிய முக்கியத்துவதையும் கூறினார்.

அவர் பேசுகையில் “முதல் ஏழு இடங்களில இரண்டு இடது கை வீரர்கள் வர வேண்டும் என்று நான் உணர்கிறேன். இங்கே ஒரு தேர்வாளர் மிக்கியமான ஒரு முடிவை எடுக்கும் நிலைமை வருகிறது. அவர்கள் ரன்களை எடுக்க துடிப்பா இருக்கும் வீரர்களை தேடுகின்ற்றனர். திலக் வர்மா அந்த இடத்திற்கு சரியாக இருந்தால் அவரை உள்ளே அழைத்து வரலாம். ஆனால் ஜட்டு உட்பட அந்த முதல் ஏழு இடங்களில் இரண்டு இடது கை வீரர்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று இடது கை வீர்கள் டாப் 7 இடத்தில் இருக்க வேண்டும் என்றார் ரவி சாஸ்திரி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை