ரோஹித், விராட் வேண்டாம். இவர்களை இந்தியாவின் டி20 அணிக்கு தேர்வு செய்யுங்கள் – ரவி சாஸ்திரி.

ஐபிஎல் 2023 தொடர் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பல புது வீரர்கள் மிகவும் அற்புதமாக செயல்படுகிறார்கள். சிலர் நம்பவே முடியாத அளவிற்கு தங்களுடைய திறமைகளை காட்டுகின்றார். இதனால் ஐபிஎல் அணிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய

By ·

ஐபிஎல் 2023 தொடர் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பல புது வீரர்கள் மிகவும் அற்புதமாக செயல்படுகிறார்கள். சிலர் நம்பவே முடியாத அளவிற்கு தங்களுடைய திறமைகளை காட்டுகின்றார். இதனால் ஐபிஎல் அணிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதோடு ஐபிஎலுக்கு அடுத்து டெஸ்ட் உலக கோப்பை மற்றும் ஒருநள் உலகக்கோப்பை நடிப்பெற இருப்பதினால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரவி சாஸ்திரி பேட்டி :

அப்படிப்பட்ட நிலையில் தனியார் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரையும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறுகையில் “தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளை சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திறமையை காட்டி வரும் நிலையில். அப்படி தங்களின் திறமையை காட்டிவரும் இளம் வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்து, தேர்வுக் குழுவினர் இப்போதே அவர்களை தயார் செய்யவேண்டும் என்றார் ரவிசாஸ்திரி.

நம் அனைவரும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் எப்படி திறமை படைத்தவர்கள் என்று நமக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்க அவர்களின் அனுபவத்தை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வைத்துக்கொண்டு, டி20 பார்மேட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். இப்ப்டி வாய்ப்பளிப்பது இந்திய அணியின் எதிர்காலத்தை வலுவானதாக மற்றும் என்று ரவிசஷத்திரி தெரிவித்தார்.

2024 உலகக்கோப்பை :

மேலும் பேசிய அவர் “2024 உலக கோப்பைக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கிறது. அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் விளையாட்டு, எந்த சூழ்நிலைகளில் எப்படி செயல்படுகிறார்கள், தொடர்ந்து அப்படியே விளையாட்டுகிறார்களா? என்பதை கருத்தில் கொண்டு சரியானவர்களை தேர்வு செய்யலாம்.

அதே போன்று அணியில் அவர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்க வேண்டும். ஒரு வீரர் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் இறங்கி சிறப்பாக ஆடும் போதும் அவர்களை தொடக்க வீரராகவோ அல்லது ஆறது இடத்திலோ களமிறங்க வைக்க கூடாது என்றார். மேலும் வலது மற்றும் இடது பேட்ஸ்மேன்களை களமிறக்கலாம். இந்த ஐபிஎல் சீசனில் அந்த வகையான அணுகுமுறைகளை பல அணிகள் சிறப்பாக செய்கின்றனர் என்றார் ரவி சாஸ்திரி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை