மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இணைந்தால் அந்த அணி இது போன்று மாறிவிடும் – அஷ்வின்.
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத்
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது. குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை.
2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியின் உரிமையாளருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அதனை அடுத்து அவர் அணியை விட்டு விலக முடிவை அப்போதே எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை அப்போது அணியில் இருந்து மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது என்று அம்பானி தரப்பில் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏலம் இல்லாமல் இது போன்ற அணியில் இருக்கும் வீரரை மற்றொரு அணிக்கு மாற்றம் செய்யும்போது அதற்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி குஜராத் அணிக்கு அளிக்க வேண்டும். இது குறித்து அஷ்வின் சில வற்றை கூறியுள்ளார் அவர் கூறுகையில்,
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் போவதாக இருந்தால் அது தங்க போன்றது. ஏனெனில் இது முழுவதும் பணம் கொடுத்து வாங்குவதாக இருக்கும். ஏனென்றால் மும்பை அணி ஒரு வீரருக்கு பதில் மற்றொரு வீரரை வாங்குவதில்லை. இது போன்று வாங்கியது என்று எனக்கு நினைவில் கூட கிடையாது. மும்பை அணியில் வளர்ந்த வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இணைந்தால் அந்த அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கும். குஜராத்தில் அனைத்து முதல் தொடரிலே ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்றெடுத்தார். அவர அவரை விடுவிப்பது என்றால் குஜராத் அணியில் பல மாற்றங்கள் ஏற்படும். ஹர்திக் பாண்டியாவிற்கு தற்பொழுது 15 கோடி கொடுத்து இருக்க காரணத்தினால் அந்த அளவிற்கு உள்ள வீரர்களை மும்பை அணி விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.