IND vs WI முதல் போட்டியில் தரமான சம்பவம் செய்த அஸ்வின் – ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா?

நேற்று முன்தினம் தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்

By ·

நேற்று முன்தினம் தொடங்கிய IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை படித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் அஸ்வின் இடப்பெறவில்லை.

இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அஸ்வின் முதல் இன்னிங்கில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்கில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்கை ஆடாமலேயே 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

அஸ்வின் படைத்துள்ள சாதனைகள் :

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் படைத்துளார். டெஸ்ட் போட்டியில் அப்பாவையும் மகனையும் வீழ்த்திய இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்தார். இதிலிருந்தே இவரின் தரம் மற்றவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதிக முறை பவுட் அவுட் செய்த இந்தியர் என்ற சாதனையையும், சர்வதேச கிரிக்கெட்டில் 700 ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வின். இவை அனைத்தும் முதல் இன்னிங்கில் மட்டும் தான்.

இரண்டாவது இன்னிங்கில் தான் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டமே இருந்தது. அதாவது 8 முறை ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையில் அணில் கும்ளே சாதனையை சமன் செய்தார். 34 முறை ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில்5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இன்னமும் அணில் கும்ளேவின் சாதனை சமன் செய்ய ஒரு ஒரு முறை மட்டுமே 5 விக்கெட் ஹுல் எடுத்தால் போதும்.

இவையோடு இரண்டு இன்னிங்கிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேலே எடுத்த வீரர் என்ற சதயையும் படைத்தார் ரவிச்சந்தின் அஸ்வின். இப்படி பல சாதனைகளை ஒரே டெஸ்ட் போட்டியில் படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மேலும் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அஸ்வின் 12விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற காரணமாக இருந்தார்.

நெட்டிசன்கள் வருத்தம் :

இந்நிலையில் தான் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினை ஏன் உலக கோப்பை டெஸ்ட் போட்டியில் எடுக்க வில்லை என்று கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்த வண்ணமாக இருக்கின்றனர். குறிப்பிடதக்க வகையில் WTC இறுதி போட்டியில் அற்புதமான விளையாடிய ஸ்மித்தை அதற்கு முன்னர் அஸ்வின் 2முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட்டாக்கி இருக்கிறார். மேலும் இடது கை பேட்மேன்கள் அத்தனை பேர் ஆஸ்திரேலியாவில் இருந்தும் அஸ்வின் இடபெறாதது ஏன் என்று கூட சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை