தோனி, யுவராஜ் சிங் இடத்தை நிரப்ப வந்தவர் – சமீப காலத்தில் சொதப்பும் வீரருக்கு அஸ்வின் பாராட்டு.

அனைவரும் எதிர்பார்த்து கடுத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரானது ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள

By ·

அனைவரும் எதிர்பார்த்து கடுத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரானது ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் காயம் காரணமாக விலகியிருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்பதினால் இந்திய அணிக்கு பலம் கூடியுள்ளது. சொல்லப்போனால் கடந்த காலங்களில் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவருமே இந்திய அணிக்காக ஆற்றிய பங்கு மிகப்பெரியது. அப்படி அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் இடத்தை நிரப்ப வந்தவர் தான் கேஎல் ராகுல்

யுவராஜ் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் ஓய்வு பெற்ற பின் இந்தியா அவர்களுக்கான மாற்று வீரர்களை தேடிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை கேஎல் ராகுல் நிபுணத்துவத்தால் நிரப்பியுள்ளார். எனவே 5வது இடத்தில் விளையாடுவதற்கு பூட்டப்பட்டுள்ள அவர் நம்முடைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ரிஷப் பண்ட் காயத்தை சந்திப்பதற்கு முன்பாக ராகுல் 2வது விக்கெட் கீப்பராக இருந்தார்.

ஆனால் தற்போது இசான் கிசான் 2வது விக்கெட் கீப்பராக வரும் அளவுக்கு கே.எல் ராகுல் தமக்கு கிடைத்த வாய்ப்பை கடினமாக பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் போது லேசான காயத்தை சந்தித்திருந்தாலும் அவர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் விளையாடுவார் என்று நம்பலாம். ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் தற்காப்பு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சு சாம்சன் தற்காலிகமாக விளையாடுவார்.

கேஎல் ராகுல் போலவே ஸ்ரேயாஸ் ஐயரும் இந்த அணியில் முக்கியமானவர். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அவர் 4வது இடத்தில் தொடர்ச்சியாக அசத்தியுள்ளார். அந்த இடத்தில் அவர் விளையாடிய போதெல்லாம் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். எனவே அவர் ஃபிட்டாகி விளையாடும் பட்சத்தில் 4வது இடத்திற்கான எந்த விவாதமும் இருக்காது என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்நிலையில் இந்திய அணியில் இவர்கள் இருவரும் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி வெற்றிபெறும் பட்சத்தில் உலக கோப்பையிலும் கடிப்பாக இவர்கள் இருவரும் இடம் பெறுவார்கள். அதே நேரத்தில் இவர்களுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பு கொடுக்காமலேயோ அலல்து மோசமான பார்மில் இருக்கும் பட்சத்தில் திலக் வர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் உலக கோப்பையில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை