தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த அஸ்வின் – அப்படி என்ன சொன்னர் தெரியுமா?
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் தான் யார் என்பதை இத உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இது சரியான தேர்வாக இருக்கவில
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் தான் யார் என்பதை இத உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இது சரியான தேர்வாக இருக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 150 ரன்களில் சுருண்டது. இதற்கு முக்கியமான காரணம் அஸ்வின் மற்றும் ஜடேஜா.
இதனையடுத்து இந்திய அணியானது சிறப்பாக விளைய்டி 421 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் கொடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்கை காட்டிலும் மிகவும் மோசமாக விளையாடி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்கில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தன்னுடைய முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டியின் மூலம் அஸ்வின் சர்வதேச போட்டியில் 707 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்டர் சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் இந்த முதலாவது போட்டி முடிந்த பின்னர் தனது இந்த சிறப்பான பந்துவீச்சிக்கு என்ன காரணம்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் “எப்பொழுதுமே நான் பந்து வீசும் போது என்னை ஒரு பேட்ஸ்மேனாக நினைத்து பந்து வீசுவேன். முதலில் சில ஓவர்கள் என்னுடைய ரிதத்தை பிடித்து விட்டால் அதன் பிறகு வித்தியாசமான கோணங்களிலும் என்னிடம் இருக்கும் ரவுண்ட் ஆர்ம்பால், டாப்ஸின், ஓவர் ஸ்பின், தட்டையான பந்துகள் என அனைத்து வகையான பந்துகளையும் பேட்ஸ்மன்களுக்கு எதிராக பயன்படுத்துவேன்.
நான் ஒரு பேட்ஸ்மேனாக யோசிப்பது ஏனென்றால் நான் பந்துவீசும் போது ஒரு பேட்டர் முனையில் இருந்து யோசித்தால் பேட்ஸ்மேனின் கால் எங்கு நகரும், அவர்கள் எங்கு ரன்களை குவிக்க ஆசைப்படுகிறார்கள்? என்பது எனக்கு தெரியும். அவ்வாறு நான் எனக்கு எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் போது அதற்கு ஏற்றவாறு பீல்டர்களை நிறுத்தி அவர்கள் ரன் குவிக்க முடியாமலும், பந்தை தடுக்க முடியாத வகையிலும் வீசுவேன். அப்படி வீசும் போது விக்கெட்டுகள் தானாக கிடைக்கும் என தனது சக்சஸ் சீக்ரெட் குறித்து அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.