இது முக்கியம் இல்லனு டிராவிட் மூளைச்சலவை செய்தார் – சுவாரசியமான தகவலை பகிர்ந்த அஸ்வின்.

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌளரான அஸ்வின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவருடன்

By ·

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌளரான அஸ்வின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவருடன் கைகோர்த்த ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஹம்மது சிராஜ் ஒரு விக்கெட்டும் ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்து வெஸ்டி இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கும் ஆல் அவுட் செய்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய முதல் நால் முடிவில் 80 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டவது நாளானது தொடங்கி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சதம் விளாசினார்கள். மேலும் 229 பார்ட்னர் ஷிப் வந்த நிலையில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பந்த சுப்மன் கில் பரிதாபமாக 6 ரங்களுக்கு ஆட்டமிழக்க தற்போது விராட் கோலியும் ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

அஸ்வின் கூறியது :

இந்நிலையில் தான் போட்டி முடிந்த பிறகு பேசிய அஸ்வின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசினார். அவர் கூறுகையில் “என்னுடைய கிரிக்கெட் வகையை திரும்பி பார்க்கும் போது அது எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரையும் சேர்த்தால் அது 15 முதல் 16 வருடங்கள் கொண்ட பயணமாக இருக்கும். அது அப்படி தான் சென்றது என நான் அனைவரிடமும் சொல்வேன்.

நான் அவரை பயிற்சியாளராக முதன்முதலில் சந்தித்தபோது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அவர் ‘நீங்கள் எத்தனை ரன்கள் எடுக்கிறீர்கள், எத்தனை விக்கெட்டுகள் எடுக்கிறீர்கள் என்பது பற்றி மறந்து அனைவரும் மறந்து விடுவார்கள். ஒரு அணியாக எங்கள் எப்படி செயல்பட்டு நல்ல நினைவுகளை உருவாக்குகிறீர்கள் என்பதே எப்போதும் நிலைத்திருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எப்போதுமே கூறுவார்.

அவர் கூறிய கருத்துகளை நான் ஆதரிக்கிறேன். அதனை கடைபிடிக்க ராகுல் டிராவிட் எனக்கு தேவையான மூளைச்சலவை செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடைய கிரிக்கெட் வகையை திரும்பி பார்க்கும் போது அது எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டதால் என்னால் மீண்டும் அதனை யோசித்து நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆனால் என் பார்வையில், எனக்கு நிறைய நன்றிகள் கிடைத்துள்ளன என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன்.

என்னுடைய இந்த பயணத்திற்கும் விளையாட்டு எனக்கு என்ன கொடுத்தது என்பதற்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லாக் டவுன் பந்த போது அடுத்த நம்முடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை பற்றி யோசித்து அணியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதனை மகிழ்ச்சியுடன் எதிகொள்ள தேவையான மன உறுதியை உருவாக்கி கொண்டேன் என்று கூறினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை