இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோமோ? புரளிகளுக்கு ரவீந்திர ஜடேஜா பதிலடி.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா மோதல் ஆக்டோபர் 4ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது உள்ள இந்திய அணியானது மிகவும் மோசமான பார்மில் இருக்கிறது என்றும், மற்ற அணிகள் குறிப்பாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை இந்திய முக்கியம் என்று நினைப்பதால் அதிக அழுத்தம் இருக்கும் என்றும் பாஸ்கிதானை தற்போது உள்ள இந்திய அணியை வைத்து வெல்ல வாய்ப்பு குறைவு என்றும் பலர் கூறிவரும் நிலையில் தான் இந்தியா vs பாஸ்கிதான் போட்டி குறித்து பேசியுள்ளார் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா.
பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு போட்டி நடக்கும் போது அந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை இந்தியா விளையாடும் எந்தப் போட்டியாக் இருந்தாலும் அது இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக கவனத்தை ஈர்க்கிறது. மேலும் நாங்கள் எங்கள் திறமைகளை காட்டி சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கிறோம்
போட்டிகளில் எங்களின் செயல்திறனை வழங்குவதில் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவதையும் நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் சில நேரங்களில் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காது. இது ஒரு விளையாட்டு, மேலும் இரு தரப்பு வீரர்களும் அந்தந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
என்னுடைய கருத்துப்படி இரு அணிகளும் நீங்கள் சரியான கவனம் செலுத்தி களத்தில் உங்களின் 100% வீதத்தை அளிக்க வில்லை என்றரல் உங்களால் அந்த போட்டியில் வெல்ல முடியாது. உங்களால் முடிந்த முயற்சியைக் கொடுத்து வெற்றி பெற விளையாடலாம், ஆனால் நாளின் முடிவு உங்கள் வழியில் செல்லவில்லை என்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம் போட்டியை வெல்வதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றார் ரவீந்திர ஜடேஜா.