இவர்களுக்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை – ரவீந்திர ஜடேஜாவின் ட்விட்டர் பதிவு.

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. இந்நிலையில் போட்டியில் முதல் இன்னிங்கின் போது விக்கெட்டுகள் விழுந்து சென்னை அணிக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 16 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். மே

By ·

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்றது. இந்நிலையில் போட்டியில் முதல் இன்னிங்கின் போது விக்கெட்டுகள் விழுந்து சென்னை அணிக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 16 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். மேலும் இரண்டவது இன்னிங்கில் அவரது அற்புதமான பந்துவீச்சு மற்றும் களத்தில் அவரது சுறுசுறுப்பு ஆகியவற்றிற்காக, ஜடேஜாவுக்கு போட்டியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் சென்னை அணியின் ஆல்-ரவுண்டர் ஜடேஜா அவர் விருதைப் பெறுவது போன்ற ஒரு படத்தைப் பகிர்ந்து பதில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் அப்ஸ்டாக்ஸுக்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது ரசிகர்கள் ஜடேஜா விளையாடும் போது தங்களுக்கு பிடித்த சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி களமிறகுக்குவதற்காக WE Want Dhoni என்று கோஷமிட்டனர். மேலும் சமீபத்தில் நடந்த CSK vs DC போட்டியில் கூட ஜடேஜா சில மனதை உருக்கும் விஷியங்களை கூறினார் ” நான் களமிறங்கிய போது தோனி தோனி என்று ரசிகர்கள் அவரை அழைத்து கொண்டே இருக்கின்றனர்.

நான் முன்னரே பேட்டிங் செய்ய வந்தால் ரசிகர்கள் நான் ஆட்டமிழக்க காத்துகொண்டு இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அணி வெற்றியடையும் வரையில் அது எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறினார் ரவீந்திர ஜடேஜா. இருந்த போதிலும் ரசிகர்கள் ஜடேஜா மனவருத்தத்துடன் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று நடந்த போட்டிக்கும் பிறகு அப்படிப்பட்ட ஒரு ட்விட்டர் பதிவை இட்டிருக்கிறார் ஜடேஜா.

இந்த சர்ச்சைக்கு நடுவே ஜடேஜா சென்னை அணியின் கேப்டனும் தன்னுடைய நீண்டநாள் நம்பருமான தோனியிடன் வாக்குவாதத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் மைத்தனத்தில் தோனியும் ஜடேஜாவும் ஒரு வலுவான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும், அவர் கேப்டனின் நம்பிக்கையான வீரர் என்பதும் தெரிந்தது. இருந்த போதிலும் ஜடேஜாவின் இந்த ட்விட் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜாவை பற்றி பேசுகையில் அவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான விளையாட்டை விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னை அணியின் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான வீரர்களில் கண்டிப்பாக ஜடேஜாவின் பெயரும் கண்டிப்பாக இடம் பெரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதோடு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஜடேஜா இருப்பார் என்றும் கூட வதந்தி பரவிவந்த நிலையில் தான் ஜடேஜாவின் இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை