ருதுராஜ் 40 பந்துக்கு 40 ரன் எடுக்கலயா… விராட் கோலிக்கு மட்டும் விமர்சனம் வருகிறது – அம்பதி ராயுடு பேச்சு.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருப்பதினால் எந்த அணி இந்த வருடம் வெட்டி பெரும் எந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தொடக்கத்தில் பெரும் அடி வாங்கிய

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருப்பதினால் எந்த அணி இந்த வருடம் வெட்டி பெரும் எந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தொடக்கத்தில் பெரும் அடி வாங்கிய பெங்களூரு அணி தற்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டு வெற்றிகளை பெற்று வருகிறது.

இருந்த போதிலும் பிளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம் தான். இந்நிலையில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் முக்கிய வீரருமான விராட் கோலி மீது சமீப காலமாக விமர்சனங்கள் வருகிறது. குறிப்பாக விராட் மெதுவாக விளையாடுகிறார் என்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருக்கிறது என்றும் வர்ணனையாளர்களே விமர்சித்து வருகின்றனர்.

இவை ஒரு பக்கம் இருக்க இந்த சீசனை பொறுத்தவரையில் விராட் 12 போட்டிகளில் 166 ரன்களை அடித்துள்ளார். மேலும் அவரது சராசரி 66ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 155ஆகவும் இருக்கிறது. இதில் ஸ்ட்ரைக் ரேட் கடந்த சீசனை விடவும் அதிகம். இப்படி சிறப்பாக விளையாடிய போதிலும் விமர்சனம் வருகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயிடு தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் : நான் ஸ்ட்ரைக் ரேட்என்பது அடிக்கப்பட்ட வேண்டிய ஸ்கோர் மற்றும் மைதானத்தின் தன்மையை பொறுத்தது. இதனால் ஓ மாதிரியான ஸ்ட்ரைக் ரேட்டை எப்போதும் எதிர்பார்க்க முடியாது அதற்காக யாரையும் விமர்சிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்றும் உங்கள் ஸ்ட்ரைக் ரேட் மூலம் சமநிலைக்கு கீழ் பேட்டிங் செய்தால் நீங்கள் 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும் என்றும். அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கப்பட வேண்டும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் 140 ரன்களை துரத்தும் போது ருதுராஜ் 40 ரன்களில் 40 ரன்கள் எடுத்தது போல் விளையாடலாம். அது ஒரு முக்கியமான நாக். கூட்டு புள்ளிவிவரங்களை உண்மையில் கருத்தில் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

விராட் கோலி இந்த ஆண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அழகாகவும் சிறப்பாகவும் பேட்டிங் செய்தார். , அவர் அந்த ஸ்லாக் ஸ்வீப்களை விளையாடி வருகிறார், மேலும் அவர் உலகில் எங்கும் எந்த வடிவத்திற்காகவும் விமர்சிக்கப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றார் அம்பதி ராயுடு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை