ஜடேஜா விரக்தி ஆயிட்டாரு… சிக்சர் அடிச்சாலும் அமைதியா இருப்பாங்க – வெளிப்படையாக பேசிய அம்பதி ராயுடு.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இன்னமும் ஒரு போட்டி மட்மே இருக்கும் நிலையில் சென்னை அதில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. மேலும் தோனி மீண்டும்

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இன்னமும் ஒரு போட்டி மட்மே இருக்கும் நிலையில் சென்னை அதில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது. மேலும் தோனி மீண்டும் சென்னை மைதானத்தில் விளையாடுவார் என்பதை உறுதி செய்ய கண்மடிப்பாக சென்னை அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் தோனியை மீண்டும் சென்னை மைதானத்தில் விளையாடுவதை பார்ப்போம் என்று நம்பிக்கையில் இறுகின்றனர். இருந்த போதிலும் அவர் மீண்டும் சென்னையின் விளையாடுவாரா என்று பிளே ஆஃப் போன பிறகுதான் தெரியவரும். அதற்கு அடுத்து வரும் போட்டியில் சென்னை கண்டிப்பாக அதிக நெட் ரன் ரேட்டுடன் வெற்றி பெற்ற வேண்டியது அவசியம்.

இந்நிலையில் சென்னை ரசிகர்கள் குறிப்பாக சென்னையில் இருந்து மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தருகின்றனர். அதற்கு முக்கியமான ஒரு காரணம் தோனி சென்னை அணியில் இருப்பதுதான். செவ்ல்லபோனால் பலர் மைதானத்திற்கு வருவதே தோனியை பார்க்கத்தான் என்கின்றனர். இந்த நிலையில் தான் முன்னாள் சென்னை அணியின் வீரர் அம்பதி ராயுடு கொடுத்துள்ள பேட்டி தற்போது வைரலாகி உள்ளது.

அவர் கூறியதாவது : நீங்கள் ஒரு சிக்ஸரோ அல்லது ஒரு பவுண்டரியோ அடித்தாலும் கூட ரசிகர்களின் கூட்டம் அமைதியாக இருக்கிறது, கடந்த சில ஆண்டுகளில் நானும் ஜடேஜாவும் அதை உணர்ந்தோம். சிஎஸ்கே ரசிகர்கள் முதலில் எம்எஸ் தோனி ரசிகர்களாகவும், பின்னர் சிஎஸ்கே ரசிகர்களாகவும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஜடேஜா கூட விரக்தியடைகிறார், ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது என்றார் அம்பதி ராயுடு.

மேலும் பேசிய அம்பதி ராயுடு கூறுகையில் : தோனி சென்னையின் கடவுள். வரும் ஆண்டுகளில் எம்எஸ் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தோனி இரண்டு உலகக் கோப்பைகளின் மகிழ்ச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், மேலும் பல ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களுடன் சென்னைக்கு வாங்கி கொடுத்து சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர்.

அணிக்காகவும், நாட்டிற்காகவும், சிஎஸ்கேக்காகவும் எப்போதும் தனது வீரர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வீரராக தோனி இருந்துள்ளார். அவர் ஒரு புராணக்கதை மற்றும் கூட்டத்தில் உள்ள எல்லோரும் கொண்டாடும் ஒருவராக தோனி இருக்கிறார். சென்னையில் இதுவே அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் என்றார் அம்பதி ராயுடு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை