தீபக் சாஹரை தொடர்ந்து சீண்டும் தோனி..என்ன கரணம்? உண்மையை உடைத்த அம்பத்தி ராயுடு.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் தோனி வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய அவருக்கு மிகவும் பிடித்தமான நபர் என்றார்கள் தீபக் சாஹரை கூறலாம். ஏனென்றால் தீபக் சாஹருக்கும் தோனிக்கும் நல்ல புரிந்தனர்வு இருக்கிறது. இதனனை நாம் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அம்பத்தி ராயுடுவிடம் தீபக் சாகரை மட்டும் தோனி தொடர்ச்சியாக ஏன் சீண்டி வருகிறார்? என்பது குறித்து கேட்கப்பட்டது. மேலும் அதில் பல விஷியங்ககளையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியில் தோனியை எதிர்த்து பேசும் ஒரே ஆள் தீபக்சாகர் மட்டும்தான். தீபக்சாகருக்கு கிரிக்கெட்டில் எல்லாம் தெரிந்தது போன்ற ஒரு குணம் உடையவர்.
தம்பி போன்றவர் :
இருந்தாலும் ஒரு கிரிக்கெட்டராக ஆவர் நல்ல வீரர் தான். தோனி ஓய்வறையில் தனக்கு தோன்றும் கருத்துக்களை கூறினால் அதனை எதிர்த்து தீபக் சாகர் மட்டுமே சில கருத்துக்களை கூறுவார். இது எப்போதுமே சிஎஸ்கே அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வழக்கமான நடக்கும் விஷயம் தான். இப்படி தோனியை எதிர்த்து தீபக் சாகர் பேசுவது தான் தோனிக்கும் பிடிக்கும்.தோனியும் தீபக்சாகர் மீது நிறையவே அன்பு வைத்திருக்கிறார். அதோடு தோனிக்கு தீபக் சாகர் தம்பி போன்றவர்.
அதனால் தான் அவரிடம் தொடர்ச்சியாக தோனி சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் என அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் ராயுடு கூறிய விஷியத்தை நாம் ஏற்கனவே அண்மையில் சென்னையில் நடைபெற்ற LGM திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தோனி கூட அந்த நிகழ்ச்சியின் மேடையில் தீபக் சாகர் குறித்து சில விஷியங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் தீபக் சாகர் அருகில் இருந்தால் ஏன் அவர் இருக்கிறார்? என்று வெறுப்பாக இருக்கும் எனவும் ஆனால் அவர் அருகில் இல்லை என்றால் அவர் எங்கே இருக்கிறார் என்று மனது தேடும் எனவும். தீபக்சாகர் ஒரு போதை பொருளை போன்றவர். அதோடு தீபக்சாகர் தனது மகள் ஸீவாவிற்கு இப்போது இருக்கும் பக்குவம் கூட தீபக் சாஹருக்கு 50 வயது ஆனால் கூட வராது. அப்படி அவருக்கு முதிர்ச்சி வருவதற்குள் நான் இருக்க மாட்டேன் என்றும் கலகலப்பாக பேசியிருந்தார் தோனி.