அவருக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவு வர கூடாது – தோனி ஓய்வு எடுப்பது குறித்து அம்பதி ராயுடு கருத்து.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியயின் கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பல பரீட்சை செய்தது. இந்த போட்டியில் ருதுராஜ் ட

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியயின் கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பல பரீட்சை செய்தது. இந்த போட்டியில் ருதுராஜ் டாஸை வென்ற நிலையில் பந்துவீச முடிவு செய்தார். இது பெங்களூரு அணிக்கு சாதமாகாம போனது.

இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி அற்புதமாக விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களை குவித்தது. இதற்க்கு பிறகு களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க சென்னை தடுமாறி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவயது. இதனால் சென்னை அணி தங்களது மைதானத்தில் விளையாடும் என்ற கனவு தவிடு பொடியானது.

குறிப்பாக தோனியை சென்னை மைதானத்தில் மீண்டும் பாப்போம் என்றிருந்த ரசிர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தோனி போட்டி முடிந்ததும் பேட்டி ஒன்றும் கொடுக்கவில்லை. அதே போல சென்னை அணி நிர்வாகத்திடம் இருந்தும் தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தோனி இனி விளையாடுவாரா என்று யாருக்கும் சரியாக தெரியாத நிலையில் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு இப்படி ஒரு இறுதி போட்டியா என்று பலரும் அதிர்ச்சியிலும் உள்ளன. மேலும் தோனி தன்னுடைய முடிவை கூறுவதற்காக இந்திய ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நிலையில் சென்னை அணியின் நிர்வாகம் தோனி தன்னுடைய முடிவை சில மாதங்களில் கூறுவார் என்றும் தகவல் கிடைத்தாக கூறிய நிலையில் அனைவருமே தோனி இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சென்னை அணிக்காக கோப்பையை வாங்கி கொடுத்து சிறப்பாக கிரிக்கெட்டிற்கு விடை கொடுப்பார் என்று அனைவரும் தோனியின் அந்த ஓரு சொல்லிற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தான் முன்னாள் சென்னை அணியின் வீரரான அம்பதி ராயுடு தோனி ஓய்வு குடித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது : எம்எஸ் தோனி இன்னும் ஒரு சீசனில் விளையாட வேண்டும். அவர் இப்படி வெளியேற கூடாது என்பதால் இது அவரது கடைசியாக இருக்கக்கூடாது. அடுத்த சீசனில் விளையாடி ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அவர் ஒரு தலைமுறையின் வீரர். அவர் ஒரு முறையின் தலைமுறையில் மனிதர். எனவே அவருக்கு இப்படி இரு முடிவு இருக்க கூடாது என்றார் அம்பதி ராயுடு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை