லக்னோ அணியின் பௌலர்களை பந்தாடிய பெங்களூரு, RCB கேப்டன் அடித்த அற்புத சிக்ஸர் – வீடியோ உள்ளே.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது.அந்த வரிசையில் இன்று இரவு 7.30 மணிக்கு எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கியது.அந்த வரிசையில் இன்று இரவு 7.30 மணிக்கு எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பௌலிங்கை முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்க வில்லை.
அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட நிலையில் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்து அமித் மிஷ்ராவிடம் விட்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் மேக்ஸ்வெல் வந்த பின் அதிரடியாக மாறி பந்துகளை மைந்தானதிற்கு வெளியே அடிக்க ஆரம்பித்தார்
கேப்டன் அடித்த சிக்ஸர்
பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸிடன் இணைந்த மேக்ஸ்வெலும் ரன்களை அதிரடியாக ஆடி குவிக்க ஆரம்பித்தனர். இருவரும் இணைந்து 44 பந்துகளில் 100 ரன்களை கடந்து லக்னோ அணியின் பௌலர் பந்தாடினார்கள்.அது லக்னோ அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 5 சிக்சர்களும் 5 பவுண்டரிகளையும் அடித்து 79 ரன்களை குவித்தார்.
Absolute Carnage 🔥🔥@faf1307 deposits one out of the PARK 💥💥
— IndianPremierLeague (@IPL) April 10, 2023
We are in for an entertaining finish here folks!
Follow the match ▶️ https://t.co/76LlGgKZaq#TATAIPL | #RCBvLSG pic.twitter.com/ugHZEMWHeh
ஆரம்பத்தில் இருந்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 24 பந்துகளிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார். 6 சிக்சர்கள் மற்றும் 3பவுண்டரிகளையும் அடித்து 59 ரன்களை குவித்தார்.அதன் பின் மார்க் வுட் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்பிற்க்கு 212 ரன்களை குவித்து. இந்நிலையில் தற்போது இரண்டவது இனிங்கை ஆட வந்த லக்னோ அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.
இந்த செய்தியை எழுதும் போது தொடக்க வீரர் கெய்ல் மேயரஸ் மூன்று பந்துகளை ரன் எதுவும் எடுக்காமல் முஹம்மத் சிராஜிடம் அவுட்டானா நிலையில் லக்னோ அணி 2.3 ஓவர்கள் முடிவில் 16 ரன்களை எடுத்துள்ளது. 212 என்பது பெரிய இலக்காக இருந்தாலும் ஏற்கனவே சென்னை அணியிடம் பெரிய இலக்குடன் விளையாடிய போது பேட்டிங்கில் நன்றாக லக்னோ அணி விளையாடியது குறிப்பிடதக்கது.