இனி எல்லா போட்டியும் நமக்கு செமி பைனல் தான் – தோல்விக்கு பிறகு ஆர்சிபி பயிற்சியாளர் பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்த

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 30வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூரில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதியது. பெங்களூரு அணி இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியும் அந்த வகை போட்டியில் ஒன்றாக மாறியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் பின் தான் அவருக்கு தெரிந்தது இது முற்றிலும் தவறான முடிவு என்று. ஆரம்பத்தில் இருந்தே ஹைதராபத் அணியின் வீரர்கள் தங்களது அதிரடியை கட்டி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருந்தனர். அதாவது இதற்க்கு முன் இதே சீசனில் தான் ஹைதராபாத் அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த அணி என்ற சாதனையை படைத்தது.

அந்த சாதனையை இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்தது. அதில் அபிஷேக் ஷர்மா நிதானமாக விளையாடி 33 ரன்னில் வெளியேறி இருந்தாலும் அதன் பின் அதிரடியை காட்டிய ஹெட் 41 பந்துகளில் 104 ரன்களை எடுத்து அவர் வெளியேற அதன் பின் க்ளாசென் 31 பந்துகளில் 67 ரன்களையும் அடித்து இருந்தார். சமத் 10 பந்துகளில் 30 ரன்களிலும் மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த அளவிற்கு ரன்களை வாரி வழங்கி இருந்தால் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு மோசமாக பந்துவீசி இருப்பார்கள் என்று தெரியும். 288 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அதன் பின் அவர்களால் சிறப்பாக அதனை எடுத்துச்செல்ல முடியவில்லை எனவே பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய RCB அணியின் பயிற்சியாளர் அணியிடம் கூறுகையில் : இன்று நிச்சயமாக நமக்கு களத்தில் இது மிகவும் கடினமான இரவு என்று நான் நினைக்கிறன். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த முறையில் முடித்தார்கள். அது எங்கள் படகை தள்ளச்செல்லும் காற்றை வெளியேற்றியிருக்கலாம். நாங்கள் யோசிப்போம், எங்களுடைய அணி கண்டிப்பாக வலுவாக திரும்பி வரும். இது வெளிப்படையாக நாக்-அவுட் நேரம். ஒவ்வொரு முறையும் ஆட்டம் எங்களுக்கு அரையிறுதி போட்டி தான் என்றார் ஃப்ளவர்.

மேலும் பேசிய அவர் தினேஷ் கார்த்தி குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் : நீங்கள் அணிக்காக போராடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தில் தோற்றோம், ஆனால் நீங்கள் அனைவரும் போராடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. டிகே நீங்கள் உலகக் கோப்பை அணிக்கும் ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறீர்கள், அற்புதமாக விளையாடினீர்கள், நீங்கள் இன்னும் சிறப்பாக வருகிறீர்கள் என்றார் ஆர்சிபி பயிற்சியாளர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை