“RCB அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்” அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் – பல ஆண்டுகால கனவு நிறைவேறுமா?
ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் க
ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் கோலி கேப்டனாக ஆர்சிபி அணிக்கு பல காலம் இருந்து வெற்றி என்பது இனமும் ஆர்சிபி ரசிகர்களுக்கு கனவாகத்தான் இருந்தது வருகிறது.
இந்நிலையில் ஆர் சிபி அணி நிர்வாக பல மாற்றங்களை செய்து விட்டாது, குறிப்பாக பல் ஆண்டுகாலம் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை இந்த வருடம் நீக்கியது ஆனாலும் வெல்ல முடியவில்லை, பல முக்கிய வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் இருந்து எடுத்தது ஆனாலும் வெற்றிபெறமுடியவில்லை. இப்படி பல மாற்றங்களை செய்துவரும் ஆர்சிபி நிர்வாகம் தற்போது அந்த அணியின் பயிற்சிலையாளரையே மாற்றியுள்ளது.
அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மைக் ஹெசன் ஆரிசிபி அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார், மேலும் அணியும் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியும் தோல்வியை தழுவியது. ஆனால் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறமுடியாத நிலையில் தான் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசனை நீக்கிவிட்டு லக்னோ அணியில் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக கொண்டுவந்துள்ளது.
ஆண்டி பிளவர் பற்றி சொல்லவேண்டும் என்றால் இவர் பல டி20 போட்டிகளில் அணிகளை வெற்றிபெற செய்தவர். குறிப்பாக இங்கிலாந்து அணியாது தங்களுடைய முதல் டி20 உலக கோப்பையை ஆண்டி பிளவர் பயிற்சியின் கீழ் தான் வென்றது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 3 போட்டிகளுக்கு ஆண்டி பிளவர் தான் ஆலோசகராக இருந்தார். இதனால் இவரை தேர்வு செய்துள்ளது பெரிய நன்மையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்திருந்த பேட்டியில் “ஆர்சிபி அணியில் இணைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இவ்வளவு பெரிய அணியை பிரதிநிதிப்படுத்துவது எனக்கு கவுரவம். ஆர்சிபி அணிக்கு ரசிகர்களின் பட்டாளம் அதிகம், மேலும் நான் ஆர்சிபி அணியுடன் இணைந்து சின்னசாமி மைதானத்தில் அந்த ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் சூழ்நிலையை அனுபவிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார் ஆண்டி பிளவர்.
ஆண்டி பிளவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை ஆர்சிபி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் ஆர்சிபி ரசிகர்களின் “ஈசாலா கப் நமதே” கனவை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில மாதங்களில் ஆர்சிபி அணிக்கு இது சாதகமானதா என்று தெரிந்துவிடும்.