வெற்றிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் பாட்டு பாடி கொண்டாடிய ஆர்சிபி – வீடியோ உள்ளே.

ஆர்சிபியின் டிரெசிங் ரூம் கொண்டாட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 க்கான 27லீக் போட்டிகளில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் ,ராயல் சேலஞ்ஜர் அணியும் பஞ்சாப் மொஹாலியில் உள்ள மைதானத்தில் எதிர்கொண்டன. முன்னாள் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாத நிலையி

By ·

ஆர்சிபியின் டிரெசிங் ரூம் கொண்டாட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023 க்கான 27லீக் போட்டிகளில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் ,ராயல் சேலஞ்ஜர் அணியும் பஞ்சாப் மொஹாலியில் உள்ள மைதானத்தில் எதிர்கொண்டன. முன்னாள் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாத நிலையில் சாம் கரண் தலைமை வகித்தார். இந்நிலையில்அதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதே போல இந்த போட்டியில் டு பிளளெசிஸ் காயம் ஏற்படுத்தினால் விராட் கோலி மீண்டும் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டார். முதலில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் டுபிளஸிஸ் இணைந்து அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தையே குடுத்தனர். இருவரும் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பௌலிங்கை அனைத்து பக்ககளிலும் அடித்து விளையாடி வந்தனர். டு பிளஸிஸ் 30 பந்துகளிலே அரை சதத்தை பூர்த்தி செய்து அதிரடியாகவே விளையாடி வந்தார்.

இருவரும் இணைந்து 11.4 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிபை பூர்த்தி செய்தனர். அதன் பிறகு பெங்களூருக்கு அணிக்கு ஸ்கோர் வேகமாகவே வந்தது, விராட் கோலியும் அவரது அரை சத்ததை நிறைவு செய்தார். மீண்டும் மீண்டும் அடிக்க முயற்ச்சி செய்த நிலையில் 59 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் விராட் கோலி. இவருக்கு பிறகு வந்த மேக்ஸ்வெல் 0 ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தையே அளித்தார்.

அதன் பின் டுப்ளஸிஸ் 84 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். பஞ்சாப் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர் பெங்களூரு பேட்ஸ்மேன்கள். தினேஷ் கார்த்திக்கும் 7 ரன்களில் வெளியேற அணியின் ஸ்கோர் 174 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டி ஆரம்பத்தில் 200 ரன்களுக்கு க்கு மேல் போகும் என எதிர்பார்த்த நிலையில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்நிலையில் விராட் கோலி 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேப்டனாக பதவி ஏற்று வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியாக வெற்றியை கொண்டாடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வீரர்கள் மகிழ்ச்சியில் ஆர்சிபியின் பாடலை பாடுகின்றனர் மேலும் அதில் டு பிளேசிஸ் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. இதனை ஆர்சிபி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ RCB ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை