விராட்டிற்க்கே கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது – சொந்த மண்ணில் கிடைத்த தோல்விக்கு பிறகு டுப்ளெசிஸ் பேட்டி.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. இதற்கு முன்பு கடந்த 9 ஆண்டுகளாக கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் மோதிய போது எல்லாப் போட்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியில் கொல்கத்தா அணியின் கைகளே எப்போதும் ஓங்கி இருகின்றது. இந்த போட்டியில் பாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.அது கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் நன்றாக அமைந்தாலும் போட்டி போக போக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தனர். பெங்களூர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை அடித்தது. 

தன் பின்பு பேட்டிங் செய்ய 183 ரன்களை இலக்காக கொண்டுகளமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் மற்றும் நரைன் தொடக்கத்தில் இருந்து பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்திருந்தனர். 6 ஓவர்கள் முடிவிலே அவர்கள் விக்கெட்டை இழக்காமல் 85 ரன்களை அடித்து இருந்தார்கள். இருந்த போதிலும் சொந்த மண்ணில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இதற்கு பிறகு பேசிய பெங்களூரு அணி டுப்ளெசிஸ் பேசியது பின்வருமாறு.

முதல் இன்னிங்ஸில் விக்கெட் இரண்டு வேகத்தில் இருந்தது, ஆனால் சேஸிங்கில் ஆடுகளம் சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. மேலும் விராட் கொஞ்சம் சிரமப்படுவதை நீங்கள் காணலாம். போட்டியை திரும்பிப் பார்க்கும்போது நாங்கள் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை முயற்சித்திருக்கலாம். ஆனால் சால்ட்-நரேன் பேட்டிங் செய்த விதம் ஆட்டத்தை எங்களிடம் இருந்து வெகுவாகக் கைப்பற்றினர். அவர்கள் சிறப்பாக விளையாடி முதல் ஆறு ஓவர்களிலேயே ஆட்டத்தை முறியடித்தனர்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்காக் நாங்கள் மேக்ஸ்வெல்லை முயற்சித்தோம் மற்றும் பிங்கர் ஸ்பின்னர்கள் இங்கு பயனுள்ளதாக இருக்கும் ஆனால் இன்று விக்கெட்டில் அதிக ஸ்பின் இல்லை. எதிரணி இடது மற்றும் வலது என கலவையான பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் ஸ்பின்னர்களுக்கு அது கொஞ்சம் கடினமான ஒன்றுதான். இரு வழிகளிலும் திருப்பக்கூடிய ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் எங்களுக்குத் தேவைப்பட்டார்.

வைஷக் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. லெக்ஸ் ஸ்பின்னர் கர்னை இம்பாக்ட் சப் ஆக பெற நினைத்தோம், ஆனால் அவரது கட்டர்களுக்காக அவரை அழைத்து வந்தோம். ட்ரே ரஸ் தனது 80% பந்துகளை கட்டர்களாக வீசுவதை நாங்கள் பார்த்தோம், அதனால் அது வேலை செய்யும் என்று தெரியும். திறமையின் அடிப்படையில் வைஷாக் சிறந்த்வர் என்றார் பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளெசிஸ்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை